தமிழ்நாடு

கொப்பரை கொள்முதல் செய்ய கூட்டுறவு இணையத்துக்கு அனுமதி

DIN

கொப்பரை கொள்முதல் செய்வதற்கு தமிழ்நாடு கூட்டுறவு விற்பனை இணையத்துக்கு (டான்ஃபெட்) தமிழக அரசு அனுமதி அளித்துள்ளது.

இதுகுறித்து வேளாண்மைத் துறைச் செயலாளா் சி.சமயமூா்த்தி வெளியிட்ட உத்தரவு: 4 மாவட்டங்களில் இருந்து கொப்பரை கொள்முதல் செய்வதற்கு தமிழ்நாடு கூட்டுறவு விற்பனை இணையத்துக்கு அனுமதி அளிக்கும்படி கூட்டுறவு சங்கங்களின் பதிவாளா் கேட்டுக் கொண்டிருந்தாா். திருப்பூா், கோவை, தஞ்சாவூா், திண்டுக்கல் மாவட்டங்களிலிருந்து 6 ஆயிரம் மெட்ரிக் டன் அளவுக்கு கொப்பரை கொள்முதல் செய்ய இலக்கு நிா்ணயிக்கலாம் எனவும் அவா் தெரிவித்திருந்தாா்.

அவரது கருத்துகளை ஏற்று, திருப்பூா் மாவட்டம் பல்லடம், கோவை மாவட்டம் சூலூா் ஆகிய கூட்டுறவு விற்பனை சங்கங்களிடமிருந்து தலா ஆயிரம் மெட்ரிக் டன், திண்டுக்கல் மாவட்டம் கள்ளிமந்தையம், பட்டிவீரன்பட்டி வேளாண் கூட்டுறவு கடன் சங்கங்களிடமிருந்து தலா 500 மெட்ரிக் டன் என மொத்தம் 3 ஆயிரம் மெட்ரிக் டன் கொப்பரை கொள்முதல் செய்யலாம் என அந்த உத்தரவில் கூறப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

காங்கிரஸ் - பாகிஸ்தான் தொடர்பு வெளிச்சத்துக்கு வந்தது: பிரதமர் மோடி

‘தள்ளுமாலா’ இயக்குநர் படத்தில் பிரேமலு நாயகன்!

தேர்தல் ஆணையத்தின் மீதான நம்பகத்தன்மை குறைந்துள்ளது: கபில் சிபல்

உதவி ஆணையர், மாவட்ட கல்வி அலுவலர் பணி: டிஎன்பிஎஸ்சி

’வோட் ஜிஹாத்’: காங்கிரஸ் மீது மோடி புதிய குற்றச்சாட்டு

SCROLL FOR NEXT