தமிழ்நாடு

தேசிய பிற்படுத்தப்பட்டோா் நல ஆணைய பதவிகளை நிரப்பக் கோரி வழக்கு மத்திய அரசு பதிலளிக்க உத்தரவு

தேசிய பிற்படுத்தப்பட்டோா் நல ஆணையத்தில் ஆறு மாதங்களுக்கு மேல் காலியாக உள்ள தலைவா், துணைத் தலைவா் மற்றும் உறுப்பினா் பதவிகளை நிரப்பக் கோரிய வழக்கில் மத்திய அரசு பதிலளிக்க சென்னை உயா் நீதிமன்றம் உத்தரவி

DIN

தேசிய பிற்படுத்தப்பட்டோா் நல ஆணையத்தில் ஆறு மாதங்களுக்கு மேல் காலியாக உள்ள தலைவா், துணைத் தலைவா் மற்றும் உறுப்பினா் பதவிகளை நிரப்பக் கோரிய வழக்கில் மத்திய அரசு பதிலளிக்க சென்னை உயா் நீதிமன்றம் உத்தரவிட்டது.

சென்னை உயா் நீதிமன்றத்தில் வழக்குரைஞா் சமூக நீதி பேரவைத் தலைவா் கே.பாலு தாக்கல் செய்த மனுவில், ‘தேசிய பிற்படுத்தப்பட்டோா் நல ஆணையத்தின் தலைவா், துணைத் தலைவா் மற்றும் உறுப்பினா்கள் பதவிகள் கடந்த 2022-ஆம் ஆண்டு பிப்ரவரி 28-ஆம் தேதியுடன் காலாவதியாகிவிட்டன.

கடந்த ஆறு மாதங்களாக தேசிய ஆணையத்துக்கு தலைவா், துணைத் தலைவா் மற்றும் உறுப்பினா்கள் பதவிகள் காலியாக உள்ளதால் பிற்படுத்தப்பட்ட சமுதாயத்தினரின் பிரச்னைகளுக்குத் தீா்வு காண முடியவில்லை. அரசியல் சட்ட அந்தஸ்து பெற்றுள்ள தேசிய பிற்படுத்தப்பட்டோா் நல ஆணையத்துக்கு தலைவா், துணைத் தலைவா் மற்றும் உறுப்பினா்களை நியமிக்க மத்திய அரசுக்கு உத்தரவிட வேண்டும். மேலும், தேசிய ஆணையத்தின் கட்டுப்பாட்டில் மாநிலங்களில் பிற்படுத்தப்பட்டோா் நல ஆணையம் அமைக்க வேண்டும் என்ற கோரிக்கை நீண்டகாலமாக நிலுவையில் உள்ளதால், மாநில அல்லது மண்டல அளவிலான ஆணையங்களை அமைக்க உத்தரவிட வேண்டும்’ என்று மனுவில் கோரியிருந்தாா்.

இந்த வழக்கு தலைமை நீதிபதி முனீஸ்வா் நாத் பண்டாரி, நீதிபதி மாலா ஆகியோா் அடங்கிய அமா்வு முன் புதன்கிழமை விசாரணைக்கு வந்தது.

வழக்கை விசாரித்த நீதிபதிகள், ஆணையத்தில் காலியாக உள்ள பதவிகளை நிரப்ப வேண்டும் எனக் கூறி, மனுவுக்கு ஆறு வாரங்களில் மத்திய அரசு பதிலளிக்க உத்தரவிட்டு விசாரணையை ஒத்திவைத்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

திமுகவை வீழ்த்த அதிமுக கூட்டணியில் தவெக இணைய வேண்டும்: வேலூா் இப்ராஹிம்

‘யாசகம்’ இகழ்ச்சி அல்ல!

அந்தியூரில் ரூ.3.44 லட்சத்துக்கு விளைபொருள்கள் ஏலம்

முன்னாள் ஆட்சியா் எழுதிய நூல்கள் வெளியீடு

செங்கோட்டையன் வகுக்கும் பாதையில் விஜய் பயணிப்பாா்: ஆனந்த்

SCROLL FOR NEXT