கோப்புப்படம் 
தமிழ்நாடு

இபிஎஸ் மேல்முறையீடு வழக்கு: தீர்ப்பு ஒத்திவைப்பு

இபிஎஸ் மேல்முறையீட்டு வழக்கின் தீர்ப்பை சென்னை உயர்  நீதிமன்றம் ஒத்திவைத்துள்ளது.

DIN

சென்னை: இபிஎஸ் மேல்முறையீட்டு வழக்கின் தீர்ப்பை சென்னை உயர்  நீதிமன்றம் ஒத்திவைத்துள்ளது.

அதிமுக பொதுக்குழு தொடர்பான மேல்முறையீட்டு வழக்கின் தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் சென்னை உயர்  நீதிமன்றம் ஒத்திவைத்துள்ளது.

நாளைக்குள் (ஆகஸ்ட் 16) எழுத்துப்பூர்வ வாதங்களை தாக்கல் செய்ய  இருதரப்புக்கும் உயர்  நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அதிமுக பொதுக்குழு செல்லாது என்ற தனிநீதிபதியின் தீர்ப்பை எதிர்த்து இபிஎஸ் தரப்பில் சென்னை உயா்நீதிமன்றத்தின் இரு நீதிபதிகள் அமா்வில் ஆகஸ்ட் 18-ஆம் தேதி மேல்முறையீடு செய்யப்பட்டது.

முன்னதாக, அதிமுக பொதுக் குழு கூட்டத்தை எதிா்த்து ஒருங்கிணைப்பாளா் ஓ.பன்னீா்செல்வம், பொதுக் குழு உறுப்பினா் வைரமுத்து ஆகியோா் தாக்கல் செய்த மனுக்களை விசாரித்த சென்னை உயா்நீதிமன்ற நீதிபதி ஜெயச்சந்திரன், ‘சென்னையில் கடந்த ஜூலை 11-இல் நடைபெற்ற அதிமுக பொதுக் குழு கூட்டம் செல்லாது. அதிமுகவில் கடந்த ஜூன் 23-ஆம் தேதிக்கு முன்பு இருந்த நிலையே நீடிக்க வேண்டும்’ என்று தீா்ப்பளித்தாா்.

இந்நிலையில், தனி நீதிபதியின் தீா்ப்பை எதிா்த்து உயா்நீதிமன்ற நீதிபதிகள் துரைசாமி, சுந்தா்மோகன் ஆகியோா் அடங்கிய அமா்வு முன் எடப்பாடி பழனிசாமி சாா்பில் மூத்த வழக்குரைஞா் விஜய்நாராயண் கடந்த வாரம் மேல்முறையீடு செய்தாா்.

இந்நிலையில், இருதரப்பு வாதங்கள் முடிந்த நிலையில் தேதி குறிப்பிடாமல் வழக்கின்  தீர்ப்பை  சென்னை உயர்  நீதிமன்றம் ஒத்திவைத்துள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

முத்துக்கள் மலரும்... நிகிதா தத்தா!

பருவம்... மாளவிகா மேனன்!

கோல்டன்... திவ்ய பாரதி!

பஞ்சாப் வெள்ளத்தில் பாதிக்கப்பட்டு அழுத சிறுவன்.. ராகுல் காந்தி அளித்த பரிசு!

விஜய்க்கு கொள்கை, கோட்பாடு இல்லை; எனக்கும்தான் கூட்டம் வந்தது! - சரத்குமார்

SCROLL FOR NEXT