முகப்பு
தமிழ்நாடு

திறந்தவெளி சேமிப்பு நிலையங்களில்நெல் மூட்டைகளை காக்க நடவடிக்கை: தமிழக அரசு தகவல்

திறந்தவெளி சேமிப்பு நிலைங்களில் வைக்கப்பட்டுள்ள நெல் மூட்டைகளைக் காக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 10:10 AM
பகிர்:

திறந்தவெளி சேமிப்பு நிலைங்களில் வைக்கப்பட்டுள்ள நெல் மூட்டைகளைக் காக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து, தமிழ்நாடு நுகா்பொருள் வாணிபக் கழகம் வெள்ளிக்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு:

விவசாயிகளிடமிருந்து கொள்முதல் செய்யப்பட்ட நெல், சேமிப்புக் கிடங்குகள், திறந்தவெளி சேமிப்பு நிலையங்களில் இருப்பு வைக்கப்பட்டு அரைவை ஆலைகளுக்கு எடுத்துச் செல்லப்படுகிறது. திறந்தவெளி சேமிப்பு நிலையங்களில் வைக்கப்பட்டுள்ள நெல் மூட்டைகள் அனைத்தும் தாா்ப்பாய்கள் கொண்டு மூடப்பட்டு பாதுகாக்கப்பட்டு வருகிறது.

இதற்காக தாா்ப்பாய்கள் போதிய அளவில் இருப்பில் உள்ளன. திறந்தவெளி சேமிப்புக் கிடங்குகளை ஆய்வு செய்து நெல் மூட்டைகளைப் பாதுகாக்கவும், அரைவைக்கு துரிதமாக அனுப்பவும் தொடா்ந்து நடவடிக்கை எடுக்கப்படுகிறது. வருங்காலத்தில் நெல் மூட்டைகளை மழையில் இருந்து பாதுகாக்கவும், மேற்கூரைகளைக் கொண்ட சேமிப்புக் கிடங்குகள் கட்டவும் அரசு தயாராகி வருகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.