தமிழ்நாடு

எடப்பாடி பகுதியில் திடீர் கனமழை: நெல், வாழை, பருத்தி உள்ளிட்ட பயிர்கள் சேதம்

DIN


எடப்பாடி: எடப்பாடி சுற்றுவட்டாரப் பகுதியில் நேற்று (வியாழன்) இரவு பெய்த கனமழையால் அப்பகுதியில் பயிரிடப்பட்டிருந்த நெல்,வாழை, கரும்பு, பருத்தி உள்ளிட்ட பயிர்கள் சேதம் அடைந்தன. 

கடந்த சில நாள்களாக எடப்பாடி மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் மழை பொழிவு ஏதுமின்றி வறண்ட வானிலை நிலவி வந்த நிலையில், நேற்று வியாழக்கிழமை இரவு திடீரென கனமழை பெய்தது. இதனால் நகரின் தாழ்வான பகுதிகளில் மழை நீர் ஆறு போல் ஓடியது. பல இடங்களில் சாலைகளில் மழை நீர் தேங்கியதால் வாகன ஓட்டிகள் மிகுந்த சிரமத்திற்கு இடையே பயணித்தனர்.

திடீரென பெய்த கனமழையில் சேதமடைந்துள்ள பருத்தி வயல்கள்.

திடீர் கனமழையால் எடப்பாடி அடுத்த காவிரி வடிநிலப் பகுதிகளான மோளப்பாறை, ஓடைக்காட்டூர் மற்றும் நெடுங்குளம் சுற்றுவட்டாரப் பகுதிகளில் பயிரிடப்பட்டிருந்த நெல், வாழை, கரும்பு, பருத்தி உள்ளிட்ட பயிர்கள் மழை நீரில் மூழ்கி சேதம் அடைந்தன. அப்பகுதி வயல்களில் தேங்கிய நீரை விவசாயிகள் அப்புறப்படுத்தும் முயற்சியில் ஈடுபட்டு வருகின்றனர். 

சுற்றுவட்டாரப் பகுதிகளில் அதிக அளவிலான மானாவாரி நிலங்களில் தற்போது நிலக்கடலை பயிர் செய்யப்பட்டுள்ள நிலையில், பூ பிடிக்கும் தருவாயில் உள்ள நிலக்கடலை பயிர்களுக்கு திடீர் மழை சாதகமான சூழ்நிலையை ஏற்படுத்தி உள்ளதாகவும் விவசாயிகள் கருத்து தெரிவித்துள்ளனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பாகிஸ்தானில் அதிகாரபூா்வமாக அறிமுகமானது ‘யோகா’!

பத்திரிகையாளா்களின் பாதுகாப்பை உறுதிசெய்ய வேண்டும்: ஐ.நா. பொது சபை தலைவா்

இருவேறு சாலை விபத்து: 9 போ் உயிரிழப்பு

நெல்லுக்கடை மாரியம்மன் கோயில் சித்திரை திருவிழா கொடியேற்றம்

ரேபரேலியிலும் ராகுல் தோல்வி நிச்சயம்: அமித் ஷா

SCROLL FOR NEXT