முகப்பு
தமிழ்நாடு

இயக்குநர் பாரதிராஜா நலமுடன் உள்ளார்: மருத்துவமனை

திரைப்பட இயக்குநர் பாரதிராஜாவின் உடல்நிலை சீராக உள்ளது என்று மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது. 

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 10:10 AM
பகிர்:

திரைப்பட இயக்குநர் பாரதிராஜாவின் உடல்நிலை சீராக உள்ளது என்று மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது. 

அண்மையில் மதுரைக்குச் சென்ற திரைப்பட இயக்குநா் பாரதிராஜாவுக்கு மயக்கம் ஏற்பட்டதையடுத்து அங்குள்ள ஒரு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றாா். இந்நிலையில், தீவிர சிகிச்சைக்காக சென்னை, நெல்சன் மாணிக்கம் சாலையில் உள்ள எம்ஜிஎம் மருத்துவமனையில் நேற்றுமுன்தினம் அனுமதிக்கப்பட்டாா். இதய பாதிப்புகள் அவருக்கு இருப்பதால் தீவிர சிகிச்சைப் பிரிவில் அவா் மருத்துவக் கண்காணிப்புக்கு உட்படுத்தப்பட்டு வருகிறாா்.

இந்த நிலையில் பாரதிராஜாவின் உடல்நிலை சீராக உள்ளது என்று மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது. 

Advertisement

மேலும் தீவிர சிகிச்சை பிரிவில் உள்ள பாரதிராஜாவின் உடல்நிலையை மருத்துவ நிபுணர்கள் கண்காணித்து வருவதாகவும் மருத்துவமனை நிர்வாகம் தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது. இதனிடையே மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் பாரதிராஜா வெளியிட்டுள்ள அறிக்கையில், மருத்துவமனையில் பார்வையாளர்களுக்கு அனுமதி இல்லை என்பதால் என்னை நேரில் காண வரவேண்டாம் என்று என் அன்பு கொண்ட அனைவரையும் கேட்டுக்கொள்கிறேன். 

விரைவில் பூரண நலம் பெற்று உங்கள் அனைவரையும் நேரில் சந்திக்கிறேன். இவ்வாறு அவர் கேட்டுக்கொண்டுள்ளார். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள், எதிர்வினைகள் மற்றும் பகிர்வு

View share bar
Show reactions
View quiz
Show comments