தமிழ்நாடு

மதுவைத் தவிர்ப்போம், மரத்தை நடுவோம்! மணப்பாறையில் விழிப்புணர்வு மாரத்தான்

DIN

மணப்பாறை அடுத்த வையம்பட்டியில் 'மதுவைத் தவிர்ப்போம்.. மரத்தை நடுவோம், விதிகளை மதித்து.. விபத்தினை தவிர்ப்போம்' என்பதை வலியுறுத்தி மாரத்தான் நடைபெற்றது.

10 கிலோமீட்டர் தூரத்திற்கு நடைபெற்ற போட்டியினை மாவட்ட எஸ்.பி. சுஜித்குமார் துவக்கி வைத்து, தனது அதிவிரைவுப்படையினருடன் தானும் கலந்து கொண்டி ஓடினார்.

திருச்சி மாவட்டம் மணப்பாறை அடுத்த வையம்பட்டியில் உட்கோட்ட காவல்துறை மற்றும் ஜேசிஐ வையம்பட்டி, ரோட்டரி கிளப் ஆஃப் வையம்பட்டி சார்பில்  மதுவைத் தவிர்ப்போம்.. மரத்தை நடுவோம், விதிகளை மதித்து.. விபத்தினை தவிர்ப்போம் என்பதை வலியுறுத்தி நடைபெற்ற 10 கிமீ மாரத்தான் போட்டியினை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சுஜித்குமார் கொடியசைத்து துவக்கி வைத்தார்.

ரயில்வே நிலையப் பகுதியிலிருந்து தொடங்கி, காவல்நிலையம், நெடுஞ்சாலை வழியாக கருங்குளம், செக்கணம் கிராமங்களில் சென்று பின் மீண்டும் வையம்பட்டியில் ஓட்டம் நிறைபெற்றது.

இதில் 14 வயது முதலான நூற்றுக்கணக்கான போட்டியாளர்கள் பங்கேற்று ஓடினர். கிராம பகுதியில் ஓடிய போட்டியாளர்களை உற்சாகப்படுத்தும் வகையில் கிராம மக்கள் கைத்தட்டி வரவேற்பு அளித்தனர்.

இந்த மாரத்தான் போட்டியினை துவக்கி வைத்த மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சுஜித்குமார், தனது அதிவிரைவுப்படை 10 காவலர்களுடன் தானும் கலந்து கொண்டி ஓடி பாதையினை நிறைவு செய்தார்.

போட்டியில் திருச்சி எட்டரை பகுதியினை சேர்ந்த கல்லூரி மாணவர் அரவிந்த் முதல் இடத்தையும், மணப்பாறை பள்ளி மாணவர்கள் கவுதமன், கிருபாகரன் ஆகியோர் 2-வது மற்றும் 3-வது இடங்களையும் வெற்றனர்.

இதில், மாணவர்கள் கவுதமன், கிருபாகரன் ஆகியோர் சகோதரர்கள் ஆவர். வெற்றிபெற்ற போட்டியாளர்களுக்கு கோப்பை, சான்றிதழ் மற்றும் வெகுமதி  வழங்கிய எஸ்.பி, காவல்துறை உங்கள் நண்பன் மட்டுமல்ல ஓர் பாதுகாவலனும் கூட எனக் கூறினார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

இனிமேல் சிங்கிள்!

சோதனைமேல் சோதனை.. ஹார்திக் பாண்டியாவுக்கு மீண்டும் அபராதம்!

திரையரங்கிற்குள் பட்டாசு வெடித்த அஜித் ரசிகர்கள்!

‘பார்பி’ ஆண்டிரியா!

தங்கம் விலை அதிரடியாக பவுனுக்கு ரூ.920 குறைவு!

SCROLL FOR NEXT