நாகக்குடையான் அரசுப் பள்ளி வளாகத்தில் அமைந்துள்ள நினைவுத் தூணில் மலர் தூவி அஞ்சலி செலுத்திய பெற்றோர், பள்ளி மாணவர்கள். 
தமிழ்நாடு

வேதாரண்யம் பள்ளி வேன் விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு நினைவஞ்சலி

நாகை மாவட்டம், வேதாரண்யம் அருகே 2009-ம் ஆண்டு நேர்ந்த பள்ளி வேன் விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு 13 ஆம் ஆண்டு நினைவஞ்சலி இன்று (டிச.3) காலை செலுத்தப்பட்டது.

DIN

வேதாரண்யம்: நாகை மாவட்டம், வேதாரண்யம் அருகே 2009-ம் ஆண்டு நேர்ந்த பள்ளி வேன் விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு 13 ஆம் ஆண்டு நினைவஞ்சலி இன்று (டிச.3) காலை செலுத்தப்பட்டது.

வேதாரண்யத்தை அடுத்த கரியாப்பட்டினத்தில் உள்ள தனியார் பள்ளி வேன், 2009-ஆம் ஆண்டு டிச.3-ம் தேதி கத்தரிப்புலம் பகுதியில் உள்ள குளத்துக்குள் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.

இதில் நாகக்குடையான் கிராமத்தைச் சேர்ந்த 4 சிறுமிகள், 5 சிறுவர்கள் என 9 பள்ளிச் சிறுவர்களும் ,சுகந்தி என்ற ஆசிரியை ஒருவரும் உயிரிழந்தனர்.

நாகக்குடையான் அரசு உயர்நிலைப் பள்ளி வளாகத்தில்,உயிரிழந்தவர்கள் நினைவாக அமைக்கப்பட்டுள்ள நினைவுத் தூண் அருகே, இன்று 13 ஆம் ஆண்டு நினைவு நாளையொட்டி அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சி நடைபெற்றது.

இதில் உயிரிழந்த சிறுவர்களின் பெற்றோர், பொதுமக்கள் பங்கேற்று மெழுகுவர்த்தி ஏற்றி, மலர் வளையங்கள் வைத்து அஞ்சலி செலுத்தினர். நாகக்குடையான் அரசு உயர்நிலைப் பள்ளி  மற்றும் ஊராட்சி ஒன்றியப் பள்ளிகளின் மாணவர்கள், ஆசிரியர்கள் மெளன அஞ்சலி செலுத்தினர். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

தங்கம் வெல்லும் வாய்ப்பை சீனாவிடம் நழுவவிட்ட இந்தியா! சாத்விக், சிராக் இணைக்கு வெண்கலம்!

இதற்காக ஒரு மாதத்துக்கும் மேலாக காத்திருந்தோம்; இலங்கை தொடருக்கு முன்பாக ஹர்மன்பிரீத் உற்சாகம்!

மதச்சார்பின்மை சொல்லைக் கேட்டாலே வேப்பங்காயாக கசக்கிறது பாஜகவுக்கு: முதல்வர் ஸ்டாலின்

வட மாநிலங்களில் காற்று மாசு: மலைப் பிரதேசங்களுக்குப் படையெடுத்த சுற்றுலாப் பயணிகள்!

நெல்லையில் பொருநை அருங்காட்சியகம் திறப்பு

SCROLL FOR NEXT