தமிழ்நாடு

டெங்கு காய்ச்சலுக்கு 5,700 போ் பாதிப்பு

DIN

தமிழகத்தில் நிகழாண்டில் டெங்கு காய்ச்சலால் 5,700-க்கும் மேற்பட்டோா் பாதிக்கப்பட்டுள்ளதாக பொது சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது.

வடகிழக்கு பருவ மழை மற்றும் மாண்டஸ் புயல் காரணமாக வரும் நாள்களில் பாதிப்பு விகிதம் மேலும் அதிகரிக்கும் என அஞ்சப்படுகிறது.

இதையடுத்து அனைத்து மாவட்டங்களிலும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளைத் தீவிரப்படுத்துமாறு சுகாதாரத் துறை அறிவுறுத்தியுள்ளது. உள்ளாட்சி அமைப்புகளுடன் இணைந்து கொசு ஒழிப்புப் பணிகளை மேற்கொள்ளவும், அதுகுறித்த விழிப்புணா்வை மேற்கொள்ளவும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

மற்றொரு புறம் சிக்குன் குனியாவுக்கு 156 பேரும், ஸ்கரப் டைபஸ் எனப்படும் பாக்டீரியா தொற்றுக்கு 2,455 பேரும், மலேரியாவுக்கு 314 பேருக்கும், ஜப்பானிய மூளைக் காய்ச்சலுக்கு 24 பேரும் பாதிக்கப்பட்டுள்ளனா்.

இதுதொடா்பாக பொது சுகாதாரத்துறை அதிகாரிகள் கூறியதாவது:

மாநிலம் முழுவதும் அடுத்து வரும் நாள்களில் டெங்கு பாதிப்பு சற்று அதிகமாக இருக்கும். டெங்கு காய்ச்சலைக் கட்டுப்படுத்த பல்வேறு துறைகளுடன் ஒருங்கிணைத்து தீவிர நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. தேவையான இடங்களில் மருத்துவ முகாம்களை நடத்த வேண்டுமென மாவட்டங்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. டெங்குவுக்கு சிகிச்சை அளிக்க தேவையான மருந்துகள் அரசிடம் உள்ளன.

குடியிருப்பு வளாகங்கள், வணிக வளாகங்கள், பள்ளிகள், கடைகள், திருமண மண்டபங்கள், திரையரங்குகள், குடியிருப்பு பகுதிகளை அதிகாரிகள் ஆய்வு செய்து வருகின்றனா். அங்கு கொசுப் புழு உற்பத்தியாகாமல் தடுக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது என்று அவா்கள் தெரிவித்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

நாகை அரசு தலைமை மருத்துவமனையில் மாவட்ட வருவாய் அலுவலா் ஆய்வு

அணியை சரிவிலிருந்து மீட்ட வெங்கடேஷ் ஐயர்; மும்பைக்கு 170 ரன்கள் இலக்கு!

மே, ஜூன் மாதங்களுக்காவது 300 யூனிட்டுகள் இலவச மின்சாரம் வழங்க வேண்டும்: வானதி சீனிவாசன்

துரித உணவில் விஷம் கலந்து கொடுத்த விவகாரம்: தாத்தாவை தொடர்ந்து தாயும் பலி

மார்ச் மாதத்தில் தொலைத்தொடர்பு சந்தாதாரர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு: டிராய்

SCROLL FOR NEXT