தமிழ்நாடு

சென்னைக்கு 260 கி.மீ தொலைவில் மாண்டஸ் புயல்!

வங்கக்கடலில் உருவான மாண்டஸ் புயல் தெற்கு-தென்கிழக்கே 260 கி.மீ தொலைவில் மையம் கொண்டுள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. 

DIN


வங்கக்கடலில் உருவான மாண்டஸ் புயல் தெற்கு-தென்கிழக்கே 260 கி.மீ தொலைவில் மையம் கொண்டுள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. 

இதுகுறித்து வானிலை ஆய்வுமையம் கூறுகையில், 

மாண்டஸ் புயல் படிப்படியாக சென்னையை நெருங்கி வருவதாக வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. 

வங்கக் கடலில் அந்தமான் அருகே உருவான காற்றழுத்தத் தாழ்வுப்பகுதி படிப்படியாக வலுப்பெற்று காற்றழுத்த தாழ்வு மண்டலமாக உருவானது. அது டிச.7ஆம் தேதி இரவு 11.30 மணியளவில் புயலாக வலுப்பெற்றது.

சென்னையில் இருந்து தெற்கு, தென்கிழக்கே 260 கி.மீ. தொலைவிலும், காரைக்காலில் இருந்து கிழக்கு, தென்கிழக்கே 200 கி.மீ. தொலைவிலும் மாண்டஸ் புயல் நிலைக்கொண்டுள்ளது.

இது மேற்கு - வடமேற்கு திசையில் மணிக்கு 12 கிலோ மீட்டர் வேகத்தில் நகர்ந்து வருவதாகவும் வானிலை மையம் குறிப்பிட்டுள்ளது. 

இந்தப் புயல் இது இன்று இரவு காரைக்கால் - ஸ்ரீஹரிக்கோட்டா இடையே மாமல்லபுரம் வழியாக கரையைக் கடக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. 

சென்னையில் நேற்று இரவு கொட்டி தீர்த்த கனமழையை அடுத்து, இன்று காலை முதல் மீண்டும்  மழை தொடங்கியுள்ளது. 

சென்னையில் காலை முதல் மயிலாப்பூர், பட்டினப்பாக்கம், எம் ஆர் சி நகர் உள்ளிட்ட இடங்களில் மீண்டும் மழை தொடங்கியுள்ளது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

வித் லவ் பாடல் புரோமோ!

விபி - ஜி ராம் ஜி மசோதாவுக்கு குடியரசுத் தலைவர் ஒப்புதல்!

ஓட்டுநருக்கு திடீர் மாரடைப்பு! கார்கள் மீது மோதிய லாரி! | CBE

”ஏழைகளும் பாஜகவிற்கு சம்பந்தமில்லை!” 100 நாள் வேலைத்திட்டம் பெயர் மாற்றம் குறித்து முதல்வர் மு.க.ஸ்டாலின்

புதுச்சேரியில் நடைபெறுவது தேஜ கூட்டணி அரசுதான்: முதல்வர் ரங்கசாமி

SCROLL FOR NEXT