தமிழ்நாடு

அடுத்த 3 மணி நேரத்தில் 4 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு!

தமிழகத்தின் 4 மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரத்திற்கு இடி மின்னலுடன் கூடிய கனமழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. 

DIN

தமிழகத்தின் 4 மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரத்திற்கு இடி மின்னலுடன் கூடிய கனமழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. 

இதுகுறித்து வானிலை ஆய்வுமையம் வெளியிட்டுள்ள தகவலில் 

தென்மேற்கு வங்கக் கடலில் நிலை கொண்டிருந்த மாண்டஸ் புயல் நேற்று மாலை தீவிர புயலாக வலுப்பெற்று மேற்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து இன்று காலை 8.30 மணிக்கு புயலாக வலு குறைந்து காரைக்காலுக்கு 180 கீ.மீ, கிழக்கு வட கிழக்கே மற்றும் சென்னைக்கு 260 கி.மீ தென்-தென்கிழக்கே நிலைகொண்டுள்ளது. 

இது வடமேற்கு திசையில் நகர்ந்து, வடதமிழகம் - புதுவை-தெற்கு ஆந்திரா கடற்கரையில் புதுச்சேரிக்கும் - ஸ்ரீஹரிகோட்டாவுக்கும் இடையே மாமல்லபுரத்திற்கு அருகே இன்று நள்ளிரவு - நாளை அதிகாலை கரையைக் கடக்கக்கூடும். 

இதன் காரணமாக, அடுத்த 3 மணி நேரத்திற்கு சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு மற்றும் காஞ்சிபுரம் ஆகிய 4 மாவட்டங்களில் இடி, மின்னலுடன் கூடிய கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாகவும், 

விழுப்புரம், கடலூர், திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

அன்பே வலிமையின் ஆதாரம்: வாழ்த்துகளுக்கு நன்றி கூறிய பிரதமர்!

சத்தீஸ்கரில் 12 மாவோயிஸ்டுகள் சரண்!

102 ரன்கள் வித்தியாசத்தில் ஆஸி.யை வீழ்த்தி இந்தியா அபாரம்; சமனில் ஒருநாள் தொடர்!

அமித் ஷா-வை சந்திக்கக் காரணம்…: EPS விளக்கம்! | செய்திகள்: சில வரிகளில் | 17.09.25

ஜெர்மனியில் செந்தேன்... சிவாங்கி!

SCROLL FOR NEXT