தமிழ்நாடு

கொளத்தூரில் மரம் முறிந்து விழுந்து ஆட்டோ சேதம்: உடனடியாக அகற்றிய காவல்துறைக்கு மக்கள் பாராட்டு!

DIN

கொளத்தூர் அடுத்த பெரியார் நகர் பகுதியில் மரம் முறிந்து விழுந்ததில் ஆட்டோ சேதம் அடைந்தது. தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த காவல் துறையினர் ஆயுதப்படை காவலர்கள் உதவியோடு மரத்தை வெட்டி அகற்றினர்.

அந்தமான் அருகே வங்கக்கடலில் உருவான காற்றழுத்த தாழ்வுப் பகுதி தீவிர புயலாக வலுப்பெற்று பின்னர் புயலாக வலுவிழந்து வெள்ளிக்கிழமை 10 மணியளவில் மாமல்லபுரம் அருகே கரையை கடக்க தொடங்கியது.

சுமார் 5 மணிநேரத்திற்கு பிறகு சனிக்கிழமை அதிகாலை 3 மணியளவில் மாண்டஸ் புயல் முழுமையாக கரையை கடந்ததாக இந்திய வானிலை மையம் தெரிவித்துள்ளது.

புயல் கரையை கடந்த போது சென்னை மற்றும் வடகடலோர மாவட்டங்களில் 75 கிலோ மீட்டர் வரை பலத்த காற்று வீசியது.

புயலால் சேதமடைந்த பகுதிகளை கண்டறிந்து பேரிடர் மற்றும் பிற குழுக்கள் அனுப்பப்பட்டு பணிகள் நடைபெற்று வருகின்றன. 

இந்த நிலையில் சென்னை கொளத்தூர் அடுத்த பெரியார் நகர் ஜிகேஎம் காலனி பகுதியில் 13 ஆவது தெருவில் ராட்சத மரம் முறிந்து விழுந்ததில் ஆட்டோ முழுமையாக சேதம் அடைந்தது. இதையடுத்து காவல்துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. 

தகவலை அடுத்து சம்பவ இடத்திற்கு வந்த பெரவள்ளூர் காவல் துறையினர் மாநகராட்சி ஊழியர்களுக்கு தகவல் அளித்தும் யாரும் அங்கு வராததால் உதவி ஆணையாளர் சிவக்குமார், பெரவள்ளூர் காவல் ஆய்வாளர் சூர்யாலிங்கம் ஆகியோர் தலைமையில் ஆயுதப்படை போலீசார் வரவழைக்கப்பட்டு போலீசாரிடம் இருந்த மரம் வெட்டும் இயந்திரம் மூலம் மரம் வெட்டி அகற்றப்பட்டது. சுமார் 4 மணி நேரம் போராடி மரத்தை வெட்டி அகற்றி வருகின்றனர்.

மரம் வெட்டும் இயந்திரம் மூலம் மரத்தை வெட்டி அகற்றும் பணியில் ஈடுபட்டுள்ள ஆயுதப்படை காவலர்கள்.

மாநகராட்சி தரப்பில் இருந்து ஜேசிபி இயந்திரம் மற்றும் கனரக லாரி மட்டும் கொடுக்குமாறு போலீசார் கேட்டுக் கொண்டதை எடுத்து ஜேசிபி இயந்திரமும் கனரகம் லாரி மட்டுமே கொடுக்கப்பட்டுள்ளது. போலீசாரே முன்னின்று முறிந்து விழுந்த மரத்தை வெட்டி அகற்றியதற்கு காவல்துறையினருக்கு பொது மக்கள் பாராட்டு தெரிவித்தனர். 

இதனிடையே ஜிகேஎம் காலனி மாநகராட்சி உறுப்பினர் மரம் முறிந்து விழுந்ததை காலையில் பார்த்து விட்டு சென்றதாகவும், அதன் பின் மரத்தை அகற்றுவதற்கான எந்த நடவடிக்கையிலும் ஈடுபடவில்லை என்றும் பொதுமக்கள் வருத்தம் தெரிவித்துள்ளனர். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பணம் அனுப்பியது உங்களுக்கு எப்படி தெரியும்? மோடிக்கு ராகுல் கேள்வி

ஆயிரம் கதை சொல்லும் விழிகள்! ஸ்ரீமுகி..

கௌதம் மேனனின் எந்தப் படத்தின் நாயகி போலிருக்கிறது?

'காங்கிரஸில் 25 பிஆர்எஸ் கட்சி எம்எல்ஏக்கள் இணைவார்கள்’ : தெலங்கானா அமைச்சர்!

சாம் பித்ரோடா ராஜிநாமா!

SCROLL FOR NEXT