முகப்பு
தமிழ்நாடு

மாண்டஸ் புயல்... ஜன்னல் கண்ணாடி உடைந்து ஐ.டி. ஊழியர் பலி!

மாண்டஸ் புயலால் ஏற்பட்ட சூறாவளிக்காற்றினால் ஜன்னல் கண்ணாடி உடைந்து வயிற்றில் குத்தியதில் ஐ.டி ஊழியர் பலியானார். 

Updated On : 10 டிசம்பர், 2022 at 5:21 PM
பகிர்:
Updated On : 1 பிப்ரவரி, 2024 at 4:34 PM


நீலாங்கரை: மாண்டஸ் புயலால் ஏற்பட்ட சூறாவளிக்காற்றினால் ஜன்னல் கண்ணாடி உடைந்து வயிற்றில் குத்தியதில் ஐ.டி ஊழியர் பலியானார். 

தாம்பரத்தைச் சேர்ந்தவர் விஜயகுமார்(33). இவர் துரைப்பாக்கதித்லி உள்ள ஐ.டி. நிறுவனம் ஒன்றில் இரவு பணியில் ஈடுபட்டிருந்தார். 

மாண்டஸ் புயல் காரணமாக வீசிய சூறாவளிக்காற்றினால் ஆடிக்கொண்டிருந்த ஜன்னலை அடைப்பதற்காக சென்றுள்ளார். அப்போது ஜன்னல் கண்ணாடி உடைந்து அவரது வயிற்றில் குத்தியதால் அதிகயளவில் ரத்தம் வெளியேறியது. 

Advertisement

இதையடுத்து அவரை மீட்டு அங்குள்ள தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்றபோது அவரை பரிசோதித்த மருத்தவர்கள் அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனர். 
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.