தமிழ்நாடு

மாண்டஸ் புயல் பாதிப்பு: வண்டலூர், கிண்டி பூங்காக்களில் அமைச்சர் கா.ராமச்சந்திரன் நேரில் ஆய்வு

DIN

வண்டலூர் அறிஞர் அண்ணா உயிரியல் பூங்கா மற்றும் கிண்டி சிறுவர் பூங்காவில் மாண்டஸ் புயலால் பாதிக்கப்பட்ட சுற்றுச்சுவர் மற்றும் மரங்கள் விழுந்துள்ளதை அகற்றும் பணிகள் நடைபெறுவதை வனத்துறை அமைச்சர் கா.ராமச்சந்திரன் இன்று நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். 

இந்த ஆய்வின் போது வண்டலூர் உயிரியல் பூங்காவில் மாண்டஸ் புயலால் விழுந்துள்ள மரங்களை அகற்றும் பணி துரிதமாக நடைப்பெற்றுவருவதையும் இரண்டு இடங்களில் சுற்றுச்சுவர் பாதிக்கப்பட்டுள்ளதையும், புலி கூண்டு மற்றும் விலங்குகள் உள்ள பகுதிகளில் புயலால் பாதிப்புகள் உள்ளதையும் அமைச்சர் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

இதேபோல் கிண்டி சிறுவர் பூங்கா வளாகத்தில் புயல் மழையினால் முற்றிலும் சாய்ந்துள்ள ஆலமரம் பொக்லின் இயந்திரம் மூலம் அகற்றும் பணிகள் நடைபெறுவதையும் இரண்டு இடங்களில் சுற்றுச்சுவர் விழுந்துள்ளதையும் அமைச்சர் பார்வையிட்டு ஆய்வு செய்தார். இந்த ஆய்வின் போது செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த அமைச்சர் கிண்டி சிறுவர் பூங்கா ரூபாய் 20 கோடி மதிப்பில் புனரமைக்கும் பணிகள் விரைவில் மேற்கொள்ளப்பட்டும் என்று தெரிவித்தார்.

மேலும் இந்த புயலினால் வனப்பகுதிகளில் பாதிக்கப்பட்டுள்ள மரங்களின் விவரங்கள் மற்றும் இதர சேதங்கள் கணக்கெடுக்கப்பட்டு அவற்றை சீரமைப்பதற்கான பணிகள் மேற்கொள்ளப்படும் என்றும் வனத்துறை அமைச்சர் கா.ராமச்சந்திரன் தெரிவித்தார். பூங்கா சீரமைப்பு பணிகள் போர்கால அடிப்படையில் மேற்கொள்ளப்பட்டு பொதுமக்கள் பயன்பாட்டிற்கு திறக்கப்படும் என்றும் அமைச்சர் தெரிவித்தார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஓடிடியில் மஞ்ஞுமெல் பாய்ஸ்!

பயங்கரவாதிகளின் தாக்குதல் மிகவும் வெட்கத்திற்குரியது: ராகுல் காந்தி

திருநள்ளாறு கோயிலில் குவிந்த பக்தா்கள்

பெருந்துறையில் ரூ.1.88 கோடிக்கு கொப்பரை ஏலம்

போராட்டக்காரா்களை அப்புறப்படுத்தும் விவகாரம்: உயா்நீதிமன்ற உத்தரவுக்கு உச்ச நீதிமன்றம் தடை

SCROLL FOR NEXT