தமிழ்நாடு

சென்னை பெருநகர போக்குவரத்தின் தற்போதைய நிலவரம் என்ன?

மாண்டஸ் புயலால் சாலைகளில் விழுந்துள்ள மரங்களை அப்புறப்படுத்தும் பணிகள் துரிதமாக நடைபெற்று வருகிறன்றன. 

DIN


மாண்டஸ் புயலால் சாலைகளில் விழுந்துள்ள மரங்களை அப்புறப்படுத்தும் பணிகள் துரிதமாக நடைபெற்று வருகிறன்றன. 

இந்நிலையில், வடக்கிழக்கு பருவ மழையை முன்னிட்டு சென்னை பெருநகர போக்குவரத்தின் தற்போதைய நிவவரம் குறித்து போக்குவரத்து காவல்துறை வெளியிட்டுள்ளது. 

அதில், மாண்டஸ் புயலைக் கருத்தில் கொண்டு காந்தி சிலைக்கும் நேப்பியர் பாலத்துக்கும் இடையே உள்ள காமராஜர் சாலை வழியாக வெள்ளிக்கிழமை இரவு 11 மணி முதல் இந்த சாலையில் வசிப்பவர்கள் மற்றும் அவசர சேவை வாகனங்கள் தவிர இருவழிகளிலும் போக்குவரத்து அனுமதிக்கப்படவில்லை. சனிக்கிழமை காலை 6 மணி முதல் போக்குவரத்து வழக்கம்போல் அனுமதிக்கப்பட்டுள்ளது. 

சாலைகளில் பள்ளங்கள் இல்லை. மாநகர பேருந்து போக்குவரத்து மாற்றம் எதுவும் இல்லை. 

மாண்டஸ் புயலால், சென்னையில் தெற்கு மற்றும் கிழக்கு மண்டலத்தில் 73 மரங்களும், வடக்கு மற்றும் மேற்கு மண்டலத்தில் 24 மரங்களும் , வடக்கு மற்றும் மேற்கு மண்டலத்தில் 24 மரங்களும் சாலைகளில் விழுந்துள்ளன. 

சென்னை பெருநகர காவல்துறை ஒருங்கிணைப்புடன் 72 மரங்கள் இதுவரை அப்புறப்படுத்தப்பட்டுள்ளன. மீதமுள்ள மரங்களை அப்புறப்படுத்தும் பணிகள் துரிதமாக தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

மேலும், சாலைகளில் விழுந்துள்ள 5 மின்கம்பங்களில், 3 கம்பங்கள் அப்புறப்படுத்தப்பட்டு 2 மின்கம்பங்கள் அகற்றுவதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாக சென்னை பெருநகர போக்குவரத்து காவல்துறை தெரிவித்துள்ளது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

இணையம் முழுக்க அகரம் சூர்யா!

ஜார்க்கண்ட் வரலாற்றின் ஒரு அத்தியாயம் முடிவுக்கு வந்தது: மமதா இரங்கல்

தங்கம் - வெள்ளி விலை: இன்றைய நிலவரம்!

சிபு சோரன் மறைவு: மாநிலங்களவை நாள் முழுவதும் ஒத்திவைப்பு

வின்ஃபாஸ்ட் ஆலையை திறந்து வைத்தார் முதல்வர் ஸ்டாலின்

SCROLL FOR NEXT