தமிழ்நாடு

பூண்டி ஏரிக்கு நீர்வரத்து அதிகரிப்பு: 10 ஆயிரம் கன அடி உபரி நீர் திறப்பு

பூண்டி ஏரியில் நீர்வரத்து அதிகரித்தால் ஞாயிற்றுக்கிழமை காலை முதல் 10 ஆயிரம் கன அடி உபரி நீர் திறக்கப்பட்டதால் கொசஸ்தலை ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது.

DIN

பூண்டி ஏரியில் நீர்வரத்து அதிகரித்தால் ஞாயிற்றுக்கிழமை காலை முதல் 10 ஆயிரம் கன அடி உபரி நீர் திறக்கப்பட்டதால் கொசஸ்தலை ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது.


இதனால் திருவள்ளூரிலிருந்து பூண்டி வழியாக செல்லும் தரைப்பாலம் மூழ்கியதால் போக்குவரத்து பாதிக்கப்பட்டதால் பொதுமக்கள் மிகவும் அவதிக்குள்ளாகினர். திருவள்ளூர் பகுதியில் மாண்டஸ் புயல் மழையால் இந்த 2 நாள்களாக தொடர்ந்து பெய்ததால் ஏரிகளுக்கான நீர்வரத்து கால்வாய்களில் நீர்வரத்து ஏற்பட்டு நிரம்பி வருகிறது. 

இந்த மழையால் பூண்டி ஏரிக்கான வரத்து கால்வாய்,கிருஷ்ணா கால்வாய்களில் நீர்வரத்து 10 ஆயிரம் கன அடியாக அதிகரித்துள்ளது. இதனால், ஞாயிற்றுக்கிழமை 2960 மில்லியன் கன அடி நீர் இருப்பு உள்ளது. அதோடு நீர்வரத்து கால்வாய்களில்  நீர்வரத்து அதிகரித்துள்ளது. ஏரியின் பாதுகாப்பு கருதி காலையில்  1150 கன அடியிலிருந்து 10000 கன அடி உபரி நீர் திறக்கப்பட்டதால் கொசஸ்தலை ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது.


இதனால், திருவள்ளூரியிலிருந்து பூண்டி வழியாக செல்லும் தரைப்பாலம் மூழ்கியதால் போக்குவரத்து வாகனங்கள் செல்ல தடை விதிக்கப்பட்டது. இதேபோல் திருவள்ளூர்-ஊத்துக்கோட்டை பாலமும்,செய்யூர் தரைப்பாலமும் மூழ்கியதால் போக்குவரத்து தடை உள்ளசெய்யப்பட்டு போலீஸார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டு வருகின்றனர். இதற்கிடையே பூண்டி ஆட்சியர் ஆல்பி ஜான் வர்கீஸ் ஆய்வு மேற்கொண்டார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கணவருடனான பிரிவு முடிவை கைவிட்ட சாய்னா நேவால்!

ரிஷபத்துக்கு எப்படி இருக்கும் இன்று.. தினப்பலன்கள்!

நாளைய மின்தடை: எழும்பூா், சோழிங்கநல்லூா், கோடம்பாக்கம், சேத்துப்பட்டு

வேலூா் மாவட்டத்தில் 15 துணை வட்டாட்சியா்கள் இடமாற்றம்

ஆடிப் பெருக்கு தினத்தில் பெண்கள் சிறப்பு பூஜை

SCROLL FOR NEXT