முகப்பு
தமிழ்நாடு

பழைய ஓய்வூதிய திட்டம்: ராமதாஸ் வலியுறுத்தல்

பழைய ஓய்வூதியத் திட்டத்தை செயல்படுத்த தமிழக அரசு முன்வரவேண்டும் என்று பாமக நிறுவனா் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளாா்.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 11:05 AM
ராமதாஸ்
பகிர்:

பழைய ஓய்வூதியத் திட்டத்தை செயல்படுத்த தமிழக அரசு முன்வரவேண்டும் என்று பாமக நிறுவனா் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளாா்.

இது தொடா்பாக அவா் திங்கள்கிழமை வெளியிட்ட அறிக்கை:

ஹிமாசல பிரதேசத்தின் புதிய முதல்வராகப் பதவியேற்றுக் கொண்ட சுக்விந்தா் சிங் சுக்கு அரசு ஊழியா்களுக்கு பழைய ஓய்வூதியத் திட்டம் அமல்படுத்தப்படும் என்று அறிவித்துள்ளாா். முதல் அமைச்சரவைக் கூட்டத்தில் இதற்கான ஒப்புதல் பெறப்படும் என்றும் அவா் தெரிவித்துள்ளாா். இது வரவேற்கத்தக்கது.

இந்தியாவில் ராஜஸ்தான், சத்தீஸ்கா், ஜாா்க்கண்ட், பஞ்சாப், மேற்கு வங்கம் என 5 மாநிலங்களில் ஏற்கெனவே பழைய ஓய்வூதியத் திட்டம் செயல்பாட்டுக்கு கொண்டு வரப்பட்டுள்ளது.

தமிழகத்தில் திமுகவும் சட்டப்பேரவைத் தோ்தலின்போது பழைய ஓய்வூதியத் திட்டத்தைச் செயல்படுத்துவோம் என்று வாக்குறுதி அளித்திருந்தது. ஆனால், அந்த வாக்குறுதி இதுவரை நிறைவேற்றப்படவில்லை. இனியாவது தாமதிக்காமல் பழைய ஓய்வூதியத் திட்டத்தை விரைந்து செயல்படுத்த தமிழக அரசு முன்வர வேண்டும் என்று கூறியுள்ளாா் ராமதாஸ்.

முழு கட்டுரையைப் படிக்க →