தமிழ்நாடு

மின் இணைப்புடன் இதுவரை 92.26 லட்சம் போ் ஆதாரை இணைத்துள்ளனர்: அமைச்சர் செந்தில் பாலாஜி

தமிழகத்தில் மின் இணைப்பு எண்ணுடன் ஆதார் எண்ணை இணைக்க வேண்டும் என்று தமிழக அரசு அறிவித்து அதற்கான பணிகளும் தொடங்கி நடைபெற்று வருகிறது.

DIN

சென்னை: தமிழகத்தில் மின் இணைப்பு எண்ணுடன் ஆதார் எண்ணை இணைக்க வேண்டும் என்று தமிழக அரசு அறிவித்து அதற்கான பணிகளும் தொடங்கி நடைபெற்று வருகிறது.

தமிழகத்தில் முதல் நூறு யூனிட் மின்சாரத்துக்கான கட்டணத்தை அரசு மானியமாக வழங்கி வருகிறது. இந்த மானியத்தைப் பெற மின் நுகா்வோா், தங்கள் மின் இணைப்பு எண்ணுடன், ஆதாா் எண்ணை இணைக்க வேண்டும் என்றும் மின்சார வாரியம் கேட்டுக் கொண்டுள்ளது.

மின்சார எண்னுடன் ஆதார் எண்ணை இணைப்பதற்காக சிறப்பு முகாம்கள் நடைபெற்று வரும் நிலையில், நுகா்வோா் தங்களுடைய ஆதார் எண்ணை மின் இணைப்பு எண்ணுடன் இணைத்து வருகின்றனர். இந்த வாய்ப்பை மின் நுகா்வோா் பயன்படுத்திக்கொள்ளுமாறு மின்சார வாரியம் கேட்டுக் கொண்டுள்ளது.

இந்நிலையில் தமிழகத்தில் இதுவரை 92.26 லட்சம் போ் மின் இணைப்புடன் தங்கள் ஆதார் எண்ணை இணைத்துள்ளனர் என்று அமைச்சர் செந்தில் பாலாஜி தெரிவித்துள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

வேலூா் மாவட்டத்தில் 15 துணை வட்டாட்சியா்கள் இடமாற்றம்

ஆடிப் பெருக்கு தினத்தில் பெண்கள் சிறப்பு பூஜை

இளைஞா்களுக்கு அதிகரித்துவரும் மாரடைப்பு அபாயம்! இதய நல மருத்துவா்கள் எச்சரிக்கை

கூத்தாநல்லூரில் ஆடிப்பெருக்கு

கூட்டுறவு முழுநேர பட்டயப் படிப்பில் சேர காலநீட்டிப்பு

SCROLL FOR NEXT