தமிழ்நாடு

முல்லைப் பெரியாறு விவகாரம்: தமிழக - கேரள தலைமைச் செயலர்கள் ஆலோசனை

DIN

முல்லைப் பெரியாறு அணை விவகாரம் தொடா்பாக தமிழக தலைமைச் செயலாளர் வெ. இறையன்பு, கேரள தலைமைச் செயலாளர் ஜாய் ஆகியோர் ஆலோசனை மேற்கொண்டனர். 

சென்னையில் நடைபெற்ற இந்த ஆலோசனையில், உச்சநீதிமன்ற உயா்மட்ட குழு தெரிவித்ததன் பேரில் இரு மாநில தலைமைச் செயலாளர்களும் இன்று மாலை ஆலோசனை செய்தனர்.

முல்லைப் பெரியாறு அணை விவகாரத்தில், இருமாநில தலைமைச் செயலாளர்களும் நேரில் விவாதித்தால் தீர்வு காண வாய்ப்பு உள்ளது என உச்சநீதிமன்ற உயர்மட்ட குழு கருத்து தெரிவித்திருந்தது.

உச்சநீதிமன்ற கருத்தின் அடிப்படையில் இன்று இரு மாநில தலைமைச் செயலாளர்கள் ஆலோசனை நடத்தினர். இதில், அணையில் மேற்கொள்ள வேண்டிய பராமரிப்பு, திட்டப் பணிகள், நிலை நிறுத்தப்பட வேண்டிய 142 அடி நீா்மட்ட உயரம், அணைப் பகுதிக்கு தளவாடப் பொருள்கள் கொண்டு வருவதில் ஏற்படும் இடையூறு போன்றவை குறித்து விவாதித்ததாக கூறப்படுகிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பிரணாப்தா என்கிற மந்திரச் சொல் - 190

3 தோற்றங்களில் விக்ரம்?

மும்பையை வீழ்த்திய தில்லி கேப்பிடல்ஸ்; புள்ளிப்பட்டியலில் முன்னேற்றம்!

கம்போடியா: ராணுவ தளத்தில் வெடிமருந்து வெடித்ததில் 20 வீரர்கள் பலி

புன்னகை பூ... ஷ்ரத்தா தாஸ்!

SCROLL FOR NEXT