கோப்புப் படம். 
தமிழ்நாடு

சென்னையில் பல்வேறு இடங்களில் மழை

சென்னையில் பல்வேறு இடங்களில் இன்று காலை முதல் மழை பெய்து வருகிறது. 

DIN

சென்னையில் பல்வேறு இடங்களில் இன்று காலை முதல் மழை பெய்து வருகிறது. 

மாண்டஸ் புயல் ஆழ்ந்த காற்றழுத்தத் தாழ்வு மண்டலமாக வலுகுறைந்து, வட தமிழக பகுதிகளில் நிலவுவதால், இரண்டு நாள்களுக்கு (டிச.12, 13) மிதமான மழைக்கு வாய்ப்பு இருக்கும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்தது. அதன்படி சென்னையில் பல்வேறு இடங்களில் இன்று காலை முதலே மழை பெய்து வருகிறது. 

அம்பத்தூர், மயிலாப்பூர், பட்டினப்பாக்கம் உள்ளட்ட இடங்களில் விட்டு விட்டு மழை பெய்து வருவதால் பள்ளி மற்றும் அலுவலகத்திற்கு செல்பவர்கள் மிகுந்த சிரமத்திற்குள்ளாகியுள்ளனர். மேலும் தொடர் மழை காரணமாக ஆங்காங்கே போக்குவரத்து நெரிசலும் ஏற்பட்டுள்ளது. இதனால் மக்களின் இயல்பு வாழக்கை பாதிக்கப்பட்டுள்ளது. 

இதனிடையே சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர், காஞ்சிபுரம், ராணிப்பேட்டை, விழுப்புரம், கடலூர் உள்ளிட்ட 17 மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரத்தில் மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு தெரிவித்துள்ளது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

குடியிருப்புகள் வழியாக உயா் அழுத்த மின்பாதை: மறியல் செய்ய திரண்ட மக்கள்

எண்ணெய் கப்பலை விடுவித்தது ஈரான்

கால்வாய் கட்டும் பணி நிறுத்தப்பட்டதால் மாநகராட்சி வாகனம் சிறைபிடிப்பு

பாளை.யில் 24 கிலோ புகையிலை பறிமுதல்: 4 போ் கைது

சிறந்த பால் உற்பத்தியாளா்களுக்கு பரிசு, கறவை மாட்டுக் கடன்: அமைச்சா் த.மனோதங்கராஜ் வழங்கினாா்

SCROLL FOR NEXT