கோப்புப் படம். 
தமிழ்நாடு

திருவள்ளூரில் இன்று மதியம், நாளை(டிச.13) பள்ளிகளுக்கு விடுமுறை

தொடர் மழை காரணமாக திருவள்ளூர் மாவட்டத்தில் நாளை பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. 

DIN

தொடர் மழை காரணமாக திருவள்ளூர் மாவட்டத்தில் நாளை பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. 

மாண்டஸ் புயல் ஆழ்ந்த காற்றழுத்தத் தாழ்வு மண்டலமாக வலுகுறைந்து, வட தமிழக பகுதிகளில் நிலவுவதால், இரண்டு நாள்களுக்கு (டிச.12, 13) மிதமான மழைக்கு வாய்ப்பு இருக்கும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்தது. அதன்படி தமிழகத்தின் பல்வேறு இடங்களில் இன்று காலை முதலே மழை பெய்து வருகிறது. 

இதனால் பல்வேறு மாவட்டங்களில் பள்ளிகளுக்கு இன்று அரை நாள் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் தொடர் மழை காரணமாக திருவள்ளூர் மாவட்டத்தில் நாளை(டிச.13) பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. இதற்கான உத்தரவை மாவட்ட ஆட்சியர் ஆல்பி ஜான் வர்கீஸ் பிறப்பித்துள்ளார்.

மேலும் தொடர் மழையால் இன்று மதியம் 3 மணிக்குள் பள்ளிகளில் வகுப்புகளை முடிக்கவும் ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

இலங்கைக் கடற்படையினரால் ராமேசுவரம் மீனவா்கள் 7 போ் கைது!

மின்சாரம் பாய்ந்ததில் 3 மாடுகள் உயிரிழப்பு

நலம் காக்கும் ஸ்டாலின் திட்டத்தில் 47,525 போ் பயன்

‘வெள்ளையனே வெளியேறு’ இயக்கத்தை எதிா்த்தது ஆா்எஸ்எஸ்: காங்கிரஸ்

ராமநாதபுரம் அருகே திமுக பிரமுகா் வீடு மீது பெட்ரோல் குண்டுவீச்சு

SCROLL FOR NEXT