தஞ்சை பனிப்பொழிவில் மறைந்த பெரிய கோயில்!
தஞ்சாவூர் முழுவதும் கடுமையான பனிப்பொழிவு ஏற்பட்டுள்ளதால் வாகன ஓட்டிகள் கடும் அவதிக்குள்ளாகினர்.
தஞ்சாவூர் முழுவதும் கடுமையான பனிப்பொழிவு ஏற்பட்டுள்ளதால் வாகன ஓட்டிகள் கடும் அவதிக்குள்ளாகினர்.
தஞ்சாவூர் மாவட்டத்தில் கடந்த இரண்டு நாட்களாக விட்டுவிட்டு கனமழை பெய்து வந்த நிலையில், இன்று அதிகாலை முதல் கடுமையான பனிப்பொழிவு ஏற்பட்டுள்ளது. இதனால் சாலையில் செல்லும் வாகனங்கள் மிகுந்த சிரமத்திற்கு உள்ளாகினர்.
இந்தக் கடுமையான பனிப்பொழிவால் உலக புகழ் பெற்ற தஞ்சை பெரிய கோவில் முற்றிலும் மறைந்துள்ளது.
Advertisement
Advertisement
தற்போது சபரிமலை சீசன் என்பதால், தஞ்சைக்கு ஏராளமான ஐயப்ப பக்தர்கள் சுற்றுலாவுக்கு வந்த நிலையில், பனி மூட்டத்தால், பெரிய கோயிலின் அழகை ரசிக்க முடியாமல் ஏமாற்றத்துடன் திரும்பி சென்றனர்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.