கோப்புப்படம் 
தமிழ்நாடு

மின் இணைப்புடன் ஆதார் இணைப்பு: தீர்ப்பு ஒத்திவைப்பு

மின் இணைப்புடன் ஆதாரை இணைக்க வற்புறுத்தக் கூடாது என உத்தரவிடக் கோரிய வழக்கில் தீர்ப்பு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

DIN

மின் இணைப்புடன் ஆதாரை இணைக்க வற்புறுத்தக் கூடாது என உத்தரவிடக் கோரிய வழக்கில் தீர்ப்பு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

ரவி என்பவர் தொடர்ந்த வழக்கை டிசம்பர் மாதம் 19 ஆம் தேதிக்கு தீர்ப்பை சென்னை உயர் நீதிமன்றம் ஒத்திவைத்துள்ளது.

வீட்டு உரிமையாளர் ஆதாரை மட்டுமே இணைக்க முடியும் என்பதால் வாடகைதாரருக்கு மானியம் கிடைக்காது என்று மனுதாரர் தரப்பு தெரிவித்தது. ஆதாரை இணைப்பது தொடர்பாக மின்சார ஒழுங்குமுறை ஆணையத்தின் ஒப்புதலை பெறவில்லை என்றும் மனுதாரர் தரப்பில் புகார் தெரிவித்தது.

வாடகைதாரர்கள் மானியம் பெறுவது உரிமையாளருக்கும், வாடகைதாரருக்கும் இடையிலான பிரச்னை. அனைத்து ஒப்புதலையும் பெற்ற பிறகே ஆதார் இணைப்பு குறித்த அறிவிப்பு வெளியிடப்பட்டது என்று மின்வாரியம் தரப்பில் தெரிவித்தது.

இந்நிலையில், மின் இணைப்புடன் ஆதாரை இணைப்பது தொடர்பான வழக்கை சென்னை உயர் நீதிமன்றம் ஒத்திவைத்துள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

செங்கோட்டை காா் குண்டுவெடிப்பு: நஸீா் பிலாலை மேலும் 7 நாள்கள் விசாரிக்க என்ஐஏவுக்கு அனுமதி

தில்லியில் முதல் கட்டமாக 10,000 வகுப்பறைகளில் காற்று சுத்திகரிப்பான்கள் நிறுவப்படும்: அமைச்சா் ஆஷிஷ் சூட் அறிவிப்பு

தில்லியில் மாசு கட்டுப்பாட்டு சான்றிதழ் இல்லாத சுமாா் 2800 வாகனங்களுக்கு எரிபொருள் மறுப்பு

புத்தொழில் திட்டத்தில் மாவட்டத்தின் முதல் கிராமமாக ‘ஆசனூா்’ தோ்வு

காஜிப்பூா் குப்பைக் கிடங்கில் கசிந்த அடா் புகை

SCROLL FOR NEXT