தமிழ்நாடு

முல்லைப் பெரியாறு அணை நீர்மட்டம் 141 அடியை எட்டியது:  2-ம் கட்ட வெள்ள எச்சரிக்கை

DIN

கம்பம்:  முல்லைப் பெரியாறு அணையில்  நீர்மட்டம் 141 அடியை எட்டியதால் அணையின் கீழ் பகுதி கரையோரத்தில் வசிக்கும் கேரள மக்களுக்கு பெரியாறு அணை பொறியாளர் இரண்டாம் கட்ட வெள்ள அபாய எச்சரிக்கையை புதன்கிழமை காலை 6 மணிக்கு அறிவித்தார்.

முல்லைப் பெரியாறு அணையில் புதன்கிழமை நிலவரப்படி அணையின் நீர்மட்டம் 141 அடியை எட்டியது. நீர்பிடிப்பு பகுதிகளான பெரியாறு அணையில் 3.6 மில்லி மீட்டர் மழையும், தேக்கடி ஏரியில் 2.8 மி.மீ., மழையும் பெய்தது. அணைக்குள் நீர் வரத்து விநாடிக்கு 1,166.25 கன அடியாகவும், அணையிலிருந்து தமிழக பகுதிக்கு நீர் வெளியேற்றம் விநாடிக்கு 511 கன அடியாகவும் இருந்தது. அணையில் நீர் இருப்பு 7,396 மில்லியன் கன அடியாக இருந்தது.

ஏற்கனவே கடந்த டிச.3-ல் அணையின் நீர்மட்டம் 140 அடியை எட்டியதால் முதல் கட்ட வெள்ள அபாய எச்சரிக்கை விடப்பட்டது. தற்போது 141 அடியை எட்டியதால் இரண்டாம் கட்ட வெள்ள அபாய எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. இதை அணையின் நீர் வள ஆதாரத்துறை தேக்கடி பிரிவு உதவி பொறியாளர் பி.ராஜகோபால் அறிவித்தார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பெண் கொலை: கணவா் உள்பட இருவா் கைது

இளைஞருக்கு அரிவாள் வெட்டு

குண்டா் சட்டத்தில் இளைஞா் கைது

களக்காடு உப்பாற்றில் குப்பைகளுக்கு தீ வைப்பதால் சுற்றுச்சூழல் பாதிப்பு

கழுகுமலை கோயிலில் சிறப்பு பூஜை

SCROLL FOR NEXT