முகப்பு
தமிழ்நாடு

இளைஞரை கொன்று போட்டோ, விடியோ அனுப்பிய கும்பல்: வேலூரில் அதிர்ச்சி!

வேலூரில் இளைஞரை கொலை செய்து விடியோ, போட்டோ எடுத்து குடும்பத்தாருக்கு அனுப்பிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தமிழ்நாடு

இளைஞரை கொன்று போட்டோ, விடியோ அனுப்பிய கும்பல்: வேலூரில் அதிர்ச்சி!

வேலூரில் இளைஞரை கொலை செய்து விடியோ, போட்டோ எடுத்து குடும்பத்தாருக்கு அனுப்பிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 11:06 AM
பகிர்:

வேலூரில் இளைஞரை கொலை செய்து விடியோ, போட்டோ எடுத்து குடும்பத்தாருக்கு அனுப்பிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

வேலூர் மாவட்டம் காட்பாடி அடுத்த செங்குட்டை பாரதியார் தெருவை சேர்ந்தவர் சீனிவாசன் - பாரதி தம்பதியினர். இவர்களது மகன் வெங்கடேசன் (வயது 22) பாலிடெக்னிக் படித்து வேலை தேடிவரும் இவர், கடந்த 9 -ம் தேதி மாலை வேலை தேடி செல்வதாக தாய் பாரதியிடம் கூறிவிட்டு வெளியே சென்றுள்ளார். இதற்கிடையில் நேற்று முன்தினம் இரவு 9 மணிக்கு வெங்கடேசன் தம்பி மணிகண்டனின்  வாட்ஸ்அப்புக்கு ஒரு புகைப்படம் வந்துள்ளது. அதில் வேலை தேடி சென்ற வெங்கடேசன் வெட்டுப்பட்டு ரத்த காயத்துடன் இருப்பது போல் இருந்துள்ளது.

இது குறித்து அவர் வெங்கடேசனின் நண்பர் நிர்மலிடம் கேட்டுள்ளார். வெங்கடேசனை யாரோ கூட்டி சென்று அடித்துப் போட்டு விட்டதாகவும், அதனை நான் கூறினால் என்னை குடும்பத்தோடு கொலை செய்து விடுவதாகவும் மிரட்டியுள்ளனர் என நிர்மல் தெரிவித்துள்ளார்.

இச்சம்பவம் குறித்து  காட்பாடி காவல் நிலையத்தில் வெங்கடேசனின் தாயார் பாரதி நேற்று புகார் அளித்துள்ளார். அதன் பேரில் காவல் துறையினர் வழக்கு பதிவு செய்தனர்.  காட்பாடி துணைக் கண்காணிப்பாளர் பழனி தலைமையிலான காவலர்கள் கசம் பகுதிக்கு சென்று அங்கு வெங்கடேசன் கொலை செய்யப்பட்டு புதைக்கப்பட்டிருந்ததை கண்டறிந்தனர். இதுகுறித்து காட்பாடி தாசில்தார் ஜெகதீஸ்வரனுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு, அவர் முன்னிலையில வெங்கடேஷ் உடல் தோண்டி எடுக்கப்பட்டது. பின்னர் பிரேத பரிசோதனைக்காக  அடுக்கம்பாறை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இந்த கொலை சம்பவம் குறித்து காட்பாடி காவல் துறையினர் தீவிரமாக விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

மேலும் சந்தேகத்தின் பேரில் பள்ளிக்குப்பம் பகுதியைச் சேர்ந்த திவாகர், சதீஷ் ஆகியோரை பிடித்து விசாரித்தனர். அதில், வெங்கடேசனை வெட்டி கொலை செய்த செங்குட்டை அருகேயுள்ள காலி இடத்தில் புதைத்துவிட்டதாக கூறியுள்ளனர். மேலும், கொலையாளிகள் குறித்த விசாரணையில் கரிகிரி சூர்யா, கரிகிரி மணி ஆகியோர் முக்கிய குற்றவாளிகள் என தெரியவந்தது. 

இதில், கரிகிரி சூர்யா மீது திருவலம் காவல் நிலையத்தில் சரித்திர பதிவேடு இருப்பதும் உறுதி செய்யப்பட்டுள்ளது. கஞ்சா விற்பனை தொடர்பாக ஏற்பட்ட தகராறில் கொலை நடந்ததாக முதல்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. தலைமறைவாக உள்ள மற்றவர்களை பிடிக்க காவல் துறையினர் நடவடிக்கை எடுத்துள்ளனர்.

முழு கட்டுரையைப் படிக்க →