அரசு மருத்துவமனையில் அமைச்சர் மா.சுப்பிரமணியன் திடீர் ஆய்வு: காத்திருந்த அதிர்ச்சி
செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகத்தில், பணி நேரத்தில் மருத்துவமனையில் இல்லாத 4 அரசு மருத்துவர்கள் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.
மதுராந்தகம்: செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகத்தில், பணி நேரத்தில் மருத்துவமனையில் இல்லாத 4 அரசு மருத்துவர்கள் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.
மதுராந்தகத்தில் உள்ள அரசு மருத்துவமனைக்கு இன்று காலை, மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா. சுப்பிரமணியம் திடீர் ஆய்வு மேற்கொண்டார்.
இதையும் படிக்க.. மெரீனாவில் உள்ள காந்தி சிலையை இடமாற்றம் செய்ய தமிழக அரசு அனுமதி
அங்கிருந்த மருத்துவர்களின் அறைகளுக்கு நேரடியாகச் சென்ற அமைச்சர் மா. சுப்பிரமணியன், பணியில் இருந்த மருத்துவர்களிடம் தகவல்களைக் கேட்டறிந்தார். பிறகு பணிக்கு வராத மருத்துவர்களின் விவரங்களையும் கேட்டார்.
அப்போது, மருத்துவமனையில் பணியாற்றி வரும் 4 மருத்துவர்களில் ஒருவரும் மருத்துவமனையில் பணியில் இல்லை. இதனால், பணி நேரத்தில் மருத்துவமனைக்கு வராத 4 மருத்துவர்களையும் பணியிடை நீக்கம் செய்ய உத்தரவு பிறப்பித்தார்.
இதையும் படிக்க.. சீனத்துக்கு என்னதான் பிரச்னை?
மேலும், மதுராந்தகம் மருத்துவமனை உரிய முறையில் செயல்படுகிறதா என்பதை உறுதி செய்ய, அவ்வப்போது மருத்துவமனைக்கு வந்து ஆய்வு செய்யாமல் இருந்த மருத்துவ இணை இயக்குநரை பணியிட மாற்றம் செய்யவும் அமைச்சர் மா. சுப்பிரமணியம் உத்தரவு பிறப்பித்துள்ளார்.