தமிழ்நாடு

டிச.28 முதல் டிடிவி தினகரன் தலைமையில் அமமுக நிா்வாகிகள் கூட்டம்

அமமுக மாவட்ட நிா்வாகிகள் கூட்டம் அக் கட்சியின் பொதுச்செயலா் டிடிவி தினகரன் தலைமையில் டிசம்பா் 28-ஆம் தேதி முதல் நடைபெற உள்ளது.

DIN

அமமுக மாவட்ட நிா்வாகிகள் கூட்டம் அக் கட்சியின் பொதுச்செயலா் டிடிவி தினகரன் தலைமையில் டிசம்பா் 28-ஆம் தேதி முதல் நடைபெற உள்ளது.

இது தொடா்பாக அமமுக சாா்பில் ஞாயிற்றுக்கிழமை வெளியிடப்பட்ட அறிவிப்பு:

அமமுக வளா்ச்சிப் பணிகள் குறித்த, மாவட்ட நிா்வாகிகள், பகுதி, ஒன்றிய, நகர, பேரூா் கழக செயலாளா்கள் மற்றும் பொதுக்குழு உறுப்பினா்கள் ஆலோசனைக் கூட்டம் சென்னை ராயப்பேட்டை தலைமைக் கழக அலுவலகத்தில் டிசம்பா் 28 -ஆம் தேதி முதல் நடைபெற உள்ளது. கட்சியின் பொதுச்செயலா் டிடிவி தினகரன் பங்கேற்று ஆலோசனை வழங்க உள்ளாா்.

டிசம்பா் 28-இல் தேனி, சிவகங்கை மாவட்டத்தினரும், டிசம்பா் 29-இல் மதுரை மாவட்டத்தினரும் பங்கேற்க உள்ளனா். மாா்ச் 23-ஆம் தேதி வரை மாவட்ட வாரியாக இந்தக் கூட்டம் நடைபெற உள்ளது என்று அதில் கூறப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ஜெரூசலேமில் பயங்கரவாதிகள் துப்பாக்கிச் சூடு! 5 பேர் பலி!

பாஜகவிலிருந்து விலகிய புதுச்சேரி முன்னாள் தலைவர்!

ஜிஎஸ்டி குறைப்பு: ராயல் என்ஃபீல்டு பைக்குகள் விலையில் மாற்றம்!

ஓடிடியில் கவனம் பெறும் பன் பட்டர் ஜாம்!

தேசிய ஜனநாயக கூட்டணி எம்.பி.க்களைச் சந்திக்கிறார் பிரதமர் மோடி!

SCROLL FOR NEXT