ஜல்லிக்கட்டு: மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்த விழாக் கமிட்டி
ஜல்லிக்கட்டு போட்டி நடத்தக்கோரி முறைப்படி மதுரை மாவட்ட ஆட்சியரிடம் விழா கமிட்டியினர் இன்று மனு அளித்துள்ளனர்.
ஜல்லிக்கட்டு போட்டி நடத்தக்கோரி முறைப்படி மதுரை மாவட்ட ஆட்சியரிடம் விழாக் கமிட்டியினர் இன்று மனு அளித்துள்ளனர்.
தமிழரின் பெருமைமிகு ஜல்லிக்கட்டு போட்டி ஒவ்வொரு ஆண்டும் பொங்கல் பண்டிகையின்போது மதுரையில் நடத்தப்பட்டு வருகிறது.
இந்நிலையில் இந்த ஆண்டும் திட்டமிட்டபடி ஜல்லிக்கட்டு போட்டி நடைபெறும் என்று தமிழக அரசு கூறியுள்ளது.
ஜனவரி 15, 16, 17 ஆகிய தேதிகளில் முறையே அவனியாபுரம், பாலமேடு, அலங்காநல்லூரில் ஜல்லிக்கட்டு போட்டி நடைபெற உள்ளது.
இதையடுத்து அந்தந்த ஊரின் சார்பில் விழாவை நடத்த மாவட்ட ஆட்சியரிடம் முறைப்படி விழாக் கமிட்டியினர் இன்று மனு அளித்தனர்.
இதையும் படிக்க | கலாசாரத்தைப் பாதுகாக்கவே ஜல்லிக்கட்டு: தமிழக அரசு