முகப்பு
தமிழ்நாடு

எடப்பாடி பழனிசாமி காலில் விழுந்த பாமக எம்எல்ஏ: கட்சி நிர்வாகிகள் அதிர்ச்சி..!

முன்னாள் முதல்வரும், எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிசாமியின் காலில் பாமக சட்டப்பேரவை உறுப்பினர் அருள் விழுந்தது கட்சி நிர்வாகிகள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

Updated On : 19 டிசம்பர் 2022, 10:45 am IST
எடப்பாடி பழனிசாமி காலில் விழுந்த பாமக எம்எல்ஏ அருள்
பகிர்:

சேலம்: முன்னாள் முதல்வரும், எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிசாமியின் காலில் பாமக சட்டப்பேரவை உறுப்பினர் அருள் விழுந்தது கட்சி நிர்வாகிகள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

சேலம் மகுடஞ்சாவடி பகுதியில் கபடி  உள் விளையாட்டு அரங்கத்தை ஞாயிற்றுக்கிழமை அதிமுக இடைக்கால பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி திறந்து வைத்தார் தொடர்ந்து கபடி போட்டி தொடங்கி வைத்து வீரர் வீராங்கனைகளுக்கு வாழ்த்து தெரிவித்தார்.

இந்த நிகழ்ச்சியின் நிறைவில் வருகை தந்த சேலம் மேற்கு தொகுதி பாமக சட்டப்பேரவை உறுப்பினர் அருள், மேடையில் இருந்த எடப்பாடி பழனிசாமி காலில் விழுந்து நிகழ்ச்சியில் கலந்து கொண்டார்.

Advertisement

Advertisement

இதனை சினிமா பாணியில் எதுவும் கண்டு கொள்ளாத எடப்பாடி பழனிசாமி, அடுத்த தொண்டரை கவனிக்கத் தொடங்கினார். இதனால் மேலும் பரபரப்பு நிலவியது. 

எடப்பாடி பழனிசாமி தன்னை கவனிக்கவில்லை என்று அந்த பக்கமும் இந்த பக்கமும் திரும்பிய பாமக பேரவை  உறுப்பினர் இறுதியாக அவரது பார்வையில் படும்படி இடது பக்கம் சென்று நின்றுகொண்டார். அப்போது விழா குழு சார்பில் அவருக்கு சால்வை அணிவிக்கும் படி பழனிசாமி தெரிவித்ததையடுத்து அவருக்கு சால்வை அணிவிக்கப்பட்டது

அதிமுக எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி காலில் பாமக பேரவை உறுப்பினர் விழுந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments