தமிழ்நாடு

ஜன. 4-ல் தமிழக அமைச்சரவைக் கூட்டம்

DIN

தமிழக அமைச்சரவைக் கூட்டம் ஜனவரி 4ஆம் தேதி முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. 

சென்னை தலைமை செயலகத்தில் நடைபெறும் இந்தக் கூட்டத்தில் முதல்வருடன் சேர்த்து 35 அமைச்சர்கள் பங்கற்கவுள்ளனர்.

இதில் ஆளுநர் உரையில் இடம் பெற வேண்டிய அம்சங்கள், புதிய மசோதாக்கள் குறித்து விவாதிக்கப்படுகிறது.

அடுத்தாண்டு ஜனவரி மாதம் சட்டப்பேரவைக் கூட்டம் நடைபெறவுள்ளது. 
முதல் நாள் ஆளுநர் ஆர்.என்.ரவி உரையுடன் சட்டப்பேரவைக் கூட்டம் நடைபெறும். சட்டப்பேரவைக் கூட்டத்திற்கு முன்பு, முதல்வர் தலைமையில் அமைச்சரவைக் கூட்டம் நடைபெறவுள்ளது.

10 அமைச்சர்களின் துறைகள் மாற்றியமைக்கப்பட்டுள்ள நிலையில், அவர்களின் செயல்பாடுகள் எவ்வாறு இருக்க வேண்டும் என்பது குறித்தும் கூட்டத்தில் விவாதிக்கப்படவுள்ளது.

மேலும், நிலுவையிலுள்ள மசோதாக்களுக்கு அனுமதி பெறுதல், புதிய தொழில் திட்டங்களைத் தொடங்குவது உள்ளிட்டவை குறித்தும் ஆலோசிக்கப்படவுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பதஞ்சலியின் 14 மருந்துகளுக்கு தடை!

அமேதியில் போட்டியிட ராகுலுக்கு விருப்பமில்லை? குழப்பத்தில் காங். தலைமை

எவரெஸ்ட் பயணத்தில் ஜோதிகா!

ஜூன் 1-ல் விக்கிரவாண்டி இடைத்தேர்தல்?

தமிழில் வெல்ல காத்திருக்கும் ஸ்ரீலீலா!

SCROLL FOR NEXT