தமிழ்நாடு

1,000 ஆண்டுகள் பழைமையான கோயில்களை புனரமைக்க ரூ.100 கோடி: அமைச்சர் சேகர் பாபு

DIN

1,000 ஆண்டுகள் பழைமையான கோயில்களை புனரமைக்க ரூ.100 கோடி ஒதுக்கப்பட்டுள்ளதாக இந்து சமய அற நிலையத்துறை அமைச்சர் பி.கே.சேகர்பாபு தெரிவித்துள்ளார்.
 சென்னை, பாடி, கைலாசநாதர் கோயில் மற்றும் திருவாலீஸ்வரர் கோயில்களின் திருப்பணிகள் தொடர்பாக புதன்கிழமை இந்து அற நிலையத்துறை அமைச்சர் பி.கே.சேகர்பாபு ஆய்வு மேற்கொண்டார்.பின்னர் அவர் செய்தியாளர்களிடம் கூறியது: பாடி கைலாசநாதர் கோயிலுக்கு 1996-ஆம் ஆண்டு குடமுழுக்கு விழா நடைபெற்றது. 400 ஆண்டுகள் பழைமையான இந்த கோயிலை புனரமைப்பு செய்து குடமுழுக்கு பணிகளுக்கு கூடுதல் பணியாளர்களை நியமிக்க அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
 அதேபோல், 2,000 ஆண்டுகள் பழைமையான திருவாலீஸ்வரர் கோயிலுக்கும் குடமுழுக்கு நடத்தப்படவுள்ளது. முதல்வர் மு.க.ஸ்டாலின் 1,000 ஆண்டுகளுக்கு மேற்பட்ட கோயில்களை புனரமைக்க ரூ.100 கோடி நிதி ஒதுக்கியுள்ளார். அந்த நிதி மூலம் நிகழாண்டு 120 கோயில்கள் தேர்வு செய்யப்பட்டு, புனரமைப்பதற்கான பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
 சென்னை மாநகரில் நல்ல பொருளாதார நிலையில் உள்ள சிறிய கோயில்களை மேம்படுத்தி, திருப்பணிகள் மேற்கொள்ளும் வகையில் ஆய்வு செய்ய ஒரு குழு அமைக்கப்பட்டுள்ளது. ஆய்வு செய்த 2 கோயில்களிலும், 2 ஆண்டுக்குள் திருப்பணிகள் மேற்கொள்ளப்பட்டு, குடமுழுக்கு நடத்துவதற்கான ஏற்பாடுகள் மேற்கொள்ளப்படும். வடபழனி முருகன் கோயிலில் தரிசனத்திற்கு சென்ற உயர்நீதிமன்ற நீதிபதிக்கு ஏற்பட்ட விரும்பத்தகாத நிகழ்வுக்கு எனது வருத்தத்தை தெரிவித்துக் கொள்கிறேன்.சட்டப்பிரிவு -46 (ண்ண்ண்) ன் கீழ் உள்ள 578 பெரிய கோயில்களில் பயோமேட்ரிக் வருகை பதிவு முறை செயல்படுத்தப்படவுள்ளது.
 நிகழ்வில் அம்பத்தூர் சட்டமன்ற உறுப்பினர் ஜோசப் சாமுவேல், இந்து சமய அறநிலையத்துறை ஆணையர் ஜெ.குமரகுருபரன், சென்னை மண்டல இணை ஆணையர் ந.தனபால், அம்பத்தூர் மண்டல குழுத் தலைவர் பி.கே.மூர்த்தி, திமுக பகுதி செயலர்கள் எம்.டி.ஆர்.நாகராஜ், டி.எஸ்.பி. ராஜகோபால் உள்ளிட்ட அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தினமணி செய்தி எதிரொலி கொள்ளிடத்தில் பொக்லைன் மூலம் குப்பைகள் அகற்றம்

இன்று யோகம் யாருக்கு?

இன்று நல்ல நாள்!

நாகை - இலங்கை இடையே பயணிகள் கப்பல் போக்குவரத்து தொடங்குவதில் தொடரும் சிக்கல்

மண் அரிப்பு: இடிந்து விழுந்த துலாக்கட்ட சுவா்

SCROLL FOR NEXT