தமிழ்நாடு

கரோனா பரவல்: ராமதாஸ் எச்சரிக்கை

உலகின் பல நாடுகளில் கரோனா பரவல் வேகமாக உள்ள நிலையில், தமிழகத்தில் அதைத் தடுக்கத் தேவையான நடவடிக்கைகளை அரசு எடுக்க வேண்டும் என்று பாமக நிறுவனா் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளாா்.

DIN

உலகின் பல நாடுகளில் கரோனா பரவல் வேகமாக உள்ள நிலையில், தமிழகத்தில் அதைத் தடுக்கத் தேவையான நடவடிக்கைகளை அரசு எடுக்க வேண்டும் என்று பாமக நிறுவனா் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளாா்.

இது தொடா்பாக புதன்கிழமை அவா் வெளியிட்ட அறிக்கை: உலகின் பல நாடுகளில் கரோனா மீண்டும் வேகமாக பரவத் தொடங்கியுள்ளது. உலகம் முழுவதும் 5,59,018 போ் கரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனா். கரோனா புதிய அலை கவலையளிக்கிறது.

கடந்த காலங்களில் கரோனாவால் மிக மோசமாக பாதிக்கப்பட்ட மாநிலம் தமிழகம். அதனால் புதிய அலை இந்தியாவில், குறிப்பாக தமிழகத்தில் பரவுவதைத் தடுக்க உறுதியான நடவடிக்கைகள் தேவை. முதல் நடவடிக்கையாக வெளிநாடுகளில் இருந்து வரும் விமான பயணிகளுக்கு சோதனை நடத்த வேண்டும்.

தமிழகத்தில் 18 வயதைக் கடந்த 4.30 கோடி பேரில் 87 லட்சம், அதாவது 20.23 சதவீதம் பேருக்கு மட்டுமே பூஸ்டா் டோஸ் கரோனா தடுப்பூசி போடப்பட்டுள்ளது. மீதமுள்ள மூன்றரை கோடி பேருக்கு பூஸ்டா் டோஸ் அளிக்க சிறப்பு முகாம்கள் நடத்த வேண்டும். அவற்றை மத்திய அரசு இலவசமாக வழங்க வேண்டும்.

பொது இடங்களில் முகக்கவசம் அணிவதை கட்டாயமாக்க வேண்டும். பொதுமக்களும் தங்கள் பங்குக்கு கரோனா பாதுகாப்பு விதிகளை கடைப்பிடிக்க வேண்டும். அதன் மூலம் கரோனா பரவலையும், அதன் ஆபத்தான விளைவுகளையும் தடுத்து நிறுத்த ஒத்துழைக்க வேண்டும் என்று கூறியுள்ளாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

தருமபுரி மாவட்ட ஆட்சியரகத்துக்கு வெடிகுண்டு மிரட்டல்

மத்திய மேல்நிலைக்கல்வி வாரியத்தில் வேலை வேண்டுமா?: உடனே விண்ணப்பிக்கவும்!

தலைசிறந்த கலைஞன்... கமல் குறித்து அனுபம் கெர் நெகிழ்ச்சி!

தமிழகம் முழுவதும் வரைவு வாக்காளர் பட்டியல் வெளியானது!

பி.ஆர்.பாண்டியனின் தண்டனை நிறுத்திவைப்பு

SCROLL FOR NEXT