தமிழ்நாடு

போடியில் அனுமன் ஜெயந்தி: ஆஞ்சனேயருக்கு 1008 வடை மாலை அலங்காரம்

போடியில் வெள்ளிக் கிழமை  அனுமன் ஜெயந்தியை  முன்னிட்டு  ஆஞ்சனேயருக்கு  1008  வடைகளால் ஆன மாலைகள் அணிவிக்கப்பட்டு பூஜைகள் நடைபெற்றது

DIN


போடி:    போடியில் வெள்ளிக் கிழமை  அனுமன் ஜெயந்தியை  முன்னிட்டு  ஆஞ்சனேயருக்கு  1008  வடைகளால் ஆன மாலைகள் அணிவிக்கப்பட்டு பூஜைகள் நடைபெற்றது

அனுமன் ஜெயந்தியை முன்னிட்டு போடி ஸ்ரீநிவாசப் பெருமாள் திருக்கோவிலில் உள்ள ஆஞ்சனேயர் சன்னதியில் சிறப்பு பூஜைகள் நடைபெற்றது. அதிகாலை முதலே ஆஞ்சனேயருக்கு மங்கல பொருட்களான மஞ்சள், பால், தயிர், குங்குமம், விபூதி, இளநீர், பழங்களால் திருமஞ்சன அபிஷேகம் செய்யப்பட்டது.  பின்னர் புத்தாடைகள் அணிவிக்கப்பட்டு பக்தர்கள் வழங்கிய 1008 வடைகளால் தயாரிக்கப்பட்ட மாலைகள், பழங்கள் அணிவிக்கப்பட்டு தீபாராதணைகள் நடைபெற்றன.

தொடர்ந்து ஸ்ரீதேவி, பூதேவி சகிதம் அருள்பாலிக்கும் ஸ்ரீநிவாசப் பெருமாளுக்கும் பூஜைகள் நடத்தப்பட்டன. அதிகாலை முதலே பக்தர்கள் கடும் குளிரையும் பொருட்படுத்தாமல் ஏராளமானோர் வந்து வழிபட்டனர். பூஜை ஏற்பாடுகளை ஸ்ரீநிவாச வரதன் என்ற கார்த்திக் மற்றும் கோவில் நிர்வாகிகள் செய்திருந்தனர்.  போடி பரமசிவன் மலைக்கோவிலில் உள்ள ஆஞ்சனேயருக்கும் சிறப்பு பூஜை நடைபெற்றது.

போடி வினோபாஜி காலனியில் உள்ள சங்கர நாராயணர் சன்னதியில் அனுமன் ஜெயந்தி சிறப்பு பூஜை நடைபெற்றது. இதில் சங்கரநாராயண பெருமாளுக்கு ஆஞ்சனேயர் அலங்காரம் செய்யப்பட்டிருந்தது. வடைகளாலும், வண்ண மலர்களாலும் அலங்கரிக்கப்பட்டு தீபாராதணைகள் நடைபெற்றது. அர்ச்சகர் சேகர் மற்றும் கோவில் நிர்வாகிகள் பூஜை ஏற்பாடுகளை செய்திருந்தனர். நூற்றுக்கணக்கான பெண்கள் பங்கேற்று வழிபாடு செய்தனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பனிமய மாதா போராலய திருவிழா: தூத்துக்குடியில் மீனவா்கள் கடலுக்குச் செல்லவில்லை

லாரி மோதி கல்லூரி மாணவா் உயிரிழப்பு

மாவட்ட ஹாக்கி போட்டி: கோவில்பட்டி வ.உ.சி. பள்ளி முதலிடம்

மத்திய அமைச்சா் நிதின் கட்கரி இல்லத்துக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்த நபா் கைது

தூத்துக்குடி விமான நிலையத்தில் போக்குவரத்து சேவை தொடக்கம்

SCROLL FOR NEXT