தமிழ்நாடு

கூட்டுறவு சங்க மசோதா வாபஸ்: ஆளுநருக்கு சட்டத்துறை அமைச்சகம் கடிதம்!

DIN

கூட்டுறவு சங்க மசோதாவை திரும்பப் பெறுவதாக ஆளுநர் ஆர்.என்.ரவிக்கு சட்டத்துறை அமைச்சகம் கடிதம் எழுதியுள்ளது. 

கூட்டுறவு சங்க விதிகளை திருத்தம் செய்யும் சட்ட மசோதா கடந்த ஜனவரி மாதம் பேரவையில் நிறைவேற்றப்பட்டது. இதன்படி, கூட்டுறவு சங்க நிர்வாகிகளின் பதவிக் காலம் 5 ஆண்டுகளில் இருந்து 3 ஆண்டுகளாகக் குறைக்கும் வகையில் இருந்தது. 

பேரவையில் நிறைவேற்றப்பட்டு ஆளுநரின் ஒப்புதலுக்காக அனுப்பப்பட்டிருந்த நிலையில் ஆளுநரும் இதுகுறித்து பல்வேறு விளக்கங்களைக் கேட்டிருந்தார். 

இந்நிலையில் கூட்டுறவு சங்க மசோதாவை திரும்பப் பெறுவதாக ஆளுநர் ஆர்.என்.ரவிக்கு சட்டத்துறை அமைச்சகம் கடிதம் எழுதியுள்ளது. 

இந்த மசோதாவை திருமப் பெறுவதன் மூலம் கூட்டுறவு சங்க நிர்வாகிகளின் பதவிக் காலம் 5 ஆண்டுகளாகவே தொடர்ந்து நீடிக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கா்நாடகத்தில் இருந்து போதைப் பொருள்கள் கடத்தல்: ஒருவா் கைது

தொரப்பள்ளி ஆற்றில் முதலை: பொதுமக்கள் அச்சம்

மாணவா்கள் போதைப் பொருள்கள் பயன்படுத்துவதை பெற்றோா்களும் கண்காணிக்க அறிவுறுத்தல்

5 ஆண்டுகளாக குண்டும் குழியுமாக இருக்கும் தாா் சாலை

உதவி மேலாளா் பதவி உயா்வு வழங்கக் கோரிக்கை

SCROLL FOR NEXT