தேவூர் அருகே காவிரி ஆற்றில் குளிக்கச் சென்ற கூலித்தொழிலாளி சடலமாக மீட்பு
சேலம் மாவட்டம், சங்ககிரி வட்டம், தேவூர் அருகே உள்ள காவிரி ஆற்றில் வெள்ளிக்கிழமை குளிக்கச் சென்ற கூலித்தொழிலாளி நீரில் முழ்கி உயிரிழந்தார்.
சங்ககிரி: சேலம் மாவட்டம், சங்ககிரி வட்டம், தேவூர் அருகே உள்ள காவிரி ஆற்றில் வெள்ளிக்கிழமை குளிக்கச் சென்ற கூலித்தொழிலாளி நீரில் முழ்கி உயிரிழந்தார்.
நாமக்கல் மாவட்டம், சாணார்பாளையம் பகுதியைச் சேர்ந்த கூலித் தொழிலாளிகள் டி.கார்த்தி மற்றொரு கார்த்தி, சுரேஷ் ஆகிய மூன்று இளைஞர்கள் தேவூரை அடுத்த புள்ளாகவுண்டம்பட்டி காவிரி ஆற்றில் குளிப்பதற்காக வெள்ளிக்கிழமை மாலை சென்றுள்ளனர். அப்போது மூவரும் ஆற்றில் குளித்துக்கொண்டிருந்தபோது திருநாவுக்கரசு மகன் கார்த்தி (26) எதிர்பாரதவிதமாக நீரில் முழ்கி விட்டார். நீரில் முழ்கிய அவர் நீண்ட நேரம் ஆகியும் வெளியே வரவில்லை.
நீரில் முழ்கிய கூலித்தொழிலாளியை இரவு முழுவதும் நண்பர்கள் தேடியும் கிடைக்கவில்லை. இதையடுத்து காவல்துறையினருக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன்பின்னர் இன்று(சனிக்கிழமை) காலை அவரது சடலத்தை காவல்துறையினர் மீட்டு இதுகுறித்து விசாரித்து வருகின்றனர்.
இதையும் படிக்க | ராகுலின் நடைப்பயணத்தில் சோனியா காந்தி, பிரியங்கா காந்தி பங்கேற்பு!