மெரினாவிலுள்ள நினைவிடத்தில் எம்ஜிஆர் குடும்பத்தினர் 
தமிழ்நாடு

மெரினாவில் எம்ஜிஆர் குடும்பத்தினர் அஞ்சலி!

தமிழக முன்னாள் முதல்வர் எம்.ஜி. ராமச்சந்திரனின் 35 ஆம் ஆண்டு நினைவு நாளையொட்டி மெரினாவிலுள்ள நினைவிடத்தில் அவரின் குடும்பத்தினர் அஞ்சலி செலுத்தினர்.

DIN

தமிழக முன்னாள் முதல்வர் எம்.ஜி. ராமச்சந்திரனின் 35 ஆம் ஆண்டு நினைவு நாளையொட்டி மெரினாவிலுள்ள நினைவிடத்தில் அவரின் குடும்பத்தினர் அஞ்சலி செலுத்தினர்.

தமிழ்நாடு முன்னாள் முதல்வர் எம்.ஜி.ஆரின் 35ஆவது நினைவு நாள் இன்று அனுசரிக்கப்பட்டுள்ளது. இதனையொட்டி தமிழகம் முழுவதுமுள்ள அதிமுக தொண்டர்கள் எம்ஜிஆரின் படத்துக்கு மரியாதை செலுத்தி வருகின்றனர். 

பல்வேறு இடங்களில் அதிமுக நிர்வாகிகள் எம்ஜிஆருக்கு மரியாதை செலுத்தி, ஏழை எளிய மக்களுக்கு நலத் திட்ட உதவிகளை வழங்கி வருகின்றனர். 

அந்தவகையில், அதிமுக சார்பில் எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அதிமுகவினர் சென்னை மெரினாவிலுள்ள நினைவிடத்தில் அஞ்சலி செலுத்தினர். 

முன்னதாக எம்ஜிஆர் குடும்பத்தினர் சென்னை மெரினாவில் உள்ள அவரின் நினைவிடத்துக்குச் சென்று மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினர். அந்த படங்கள் இப்போது பரவலாக பரவி வருகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பெண்ணை அவதூறு செய்தவா் கைது

ஜம்மு-காஷ்மீா்: 2 பயங்கரவாதிகள் சுட்டுக் கொலை

சென்னை மாநகரப் பகுதிகளில் மின் விளக்குகளை சீரமைக்கக் கோரிக்கை

சிபிஎஸ்இ மண்டல இயக்குநா் மா்ம மரணம்: போலீஸாா் விசாரணை

போலீஸாரிடம் தகராறு செய்த கைதிகள் மீது 8 பிரிவுகளில் வழக்கு

SCROLL FOR NEXT