தமிழ்நாடு

ஸ்ரீரங்கம் அரங்கநாதர் கோயிலில் பகல் பத்து 3ம் நாள் உற்சவம்

DIN

ஸ்ரீரங்கம் அரங்கநாத சுவாமி கோயில் வைகுந்த ஏகாதசி விழாவில் மூன்றாம் நாளான ஞாயிற்றுக்கிழமை மூலஸ்தானத்தில் இருந்து ஸ்ரீ நம்பெருமாள் எழுந்தருளினார்.

திருச்சி ஸ்ரீரங்கம் அரங்கநாத சுவாமி திருக்கோயில் வைகுந்த ஏகாகதசி பகல் பத்து மூன்றாவது நாளான இன்று(ஞாயிற்றுக்கிழமை) அர்ச்சுன மண்டபத்தில்  சாய்வு சவுரி கொண்டை,   ரத்தின அபயஹஸ்தம், ரத்தினகிளி, பவள மாலை, முத்துச்சரம்  பஞ்சாயுத மாலை உள்ளிட்ட திருவாபரணங்கள் உள்ளிட்ட திரு ஆபரணங்கள்  அலங்காரத்தில் பக்தர்களுக்கு  ஸ்ரீ நம்பெருமாள் காட்சியளித்தார்

ஸ்ரீரங்கம் அரங்கநாத சுவாமி திருக்கோயில் மார்கழி மாதம் நடைபெறும் வைகுந்த ஏகாதசி விழா கடந்த வியாழக்கிழமை இரவு தொடங்கியது. முக்கிய நிகழ்வான பரமபதவாசல் திறப்பு ஜனவரி 2 ஆம் தேதி நடைபெறுகிறது.

இரண்டாவது நாளான சனிக்கிழமை மூலஸ்தானத்தில் இருந்து சர்வ அலங்காரத்துடன் ஸ்ரீ நம்பெருமாள் எழுந்தருளினார். 

பகல்பத்து விழாவின் முதல் நாளான வெள்ளிக்கிழமை ரத்தின நீள்முடி கீரிடம், ரத்தின அபயஹஸ்தம், கபாய் சட்டை, அடுக்குப் பதக்கம், காசு மாலை, நெல்லிக்காய் மாலை உள்ளிட்ட திருவாபரணங்களுடன் அா்ச்சுன மண்டபத்தில் எழுந்தருளிய நம்பெருமாளை ஏராளமான பக்தா்கள் நீண்ட வரிசையில் நின்று தரிசித்தனா்.

பகல்பத்தின் கடைசி நாளான ஜனவரி 1 ஆம் தேதி நம்பெருமாள் மோகினி அலங்காரத்தில் காட்சி தருகிறாா். அதனைத்  தொடா்ந்து இராப்பத்து விழாவின் முதல் நாளான 2 ஆம் தேதி முக்கிய நிகழ்வான பரமபதவாசல் திறப்பு நடைபெறவுள்ளது.

சொர்க்கவாசல் திறப்பை முன்னிட்டு வருகிற 2-ஆம் தேதி திருச்சி மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை அறிவித்து ஆட்சியர் மா.பிரதீப் குமார் உத்தரவிட்டுள்ளார். 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

5 மாவட்டங்களுக்கு மிக கனமழைக்கான ’ஆரஞ்ச்’ எச்சரிக்கை

கீழப்பாவூரில் வேளாண் கல்லூரி மாணவிகள் விழிப்புணா்வுப் பிரசாரம்

திருவாரூரில் மழை: கோடைப் பயிா்கள் பாதிப்பு

ஆறாம் கட்டத் தோ்தல்: 39% வேட்பாளா்கள் கோடீஸ்வரா்கள்!

தின்பண்டங்களில் உப்பின் அளவைக் குறிப்பிடக் கோரிக்கை

SCROLL FOR NEXT