தமிழ்நாடு

175 ஆண்டுகள் பழமையான தூய இருதய ஆண்டவர் பேராலயத்தில் கிறிஸ்துமஸ் விழா

175 ஆண்டுகள் பழமையான தூய இருதய ஆண்டவர் பேராலயத்தில் கிறிஸ்துமஸ் விழா கொண்டாட்டப்பட்டது.

DIN

175 ஆண்டுகள் பழமையான தூய இருதய ஆண்டவர் பேராலயத்தில் கிறிஸ்துமஸ் விழா கொண்டாட்டப்பட்டது. பெண்கள், குழந்தைகள் என அனைவரும் ஒன்றுகூடி இயேசு கிறிஸ்து பிறப்பு விழாவை கொண்டாடி சிறப்பு வழிபாடு செய்தனர்.

உலகம் முழுவதும் உள்ள கிறிஸ்துவ தேவாலயங்களில் இயேசு கிறிஸ்து பிறப்பு விழா வெகு சிறப்பாக கொண்டாடப்பட்டு வரும் நிலையில், தஞ்சாவூரில் உள்ள கிறிஸ்துவ ஆலயங்களில் கிறிஸ்துமஸ் விழா சிறப்பு வழிபாடு இரவு நடைபெற்றது.

தஞ்சாவூர் மேரீஸ் கார்னர் பகுதியில் உள்ள திரு இருதய பேராலயத்தில் சிறப்பு வழிபாடு இரவு நடைபெற்றது.

முன்னதாக, தஞ்சை நகர் மற்றும் சுற்றுவட்டார பகுதியில் உள்ள கிறிஸ்துவ பெருமக்கள், பெண்கள், குழந்தைகள் என அனைவரும் புத்தாடை அணிந்து பேராலயத்திற்கு வந்தனர். 

தஞ்சை நகரில் உள்ள சென் பீட்டர்ஸ் பேராலயம், தூய இருதய ஆண்டவர் பேராலயம் என அனைத்து ஆலயங்களும் அலங்கரிக்கப்பட்டு குடில்கள் அமைக்கப்பட்டிருந்தன. இயேசு பிறந்ததை நினைவுகூரும் விதமாக குழந்தை இயேசு திருஉருவத்தை மாதா வேடமணிந்த பெண் வான தூதர், சூசையப்பர் வேடம் அணிந்தவருடன் வந்து பங்குத் தந்தையிடம் கொடுத்தார். 

அச்சொரூபத்தை பங்குத் தந்தை பெற்றுக் கொண்டு, புனிதம் செய்து அலங்கரிக்கப்பட்ட திருப்பீடத்தில் வைத்தார். அப்போது, தேவாலயத்தின் மணி ஒலிக்கப்பட்டது.

இதைத் தொடர்ந்து மறையுரை, கூட்டுப்பாடல் திருப்பலி நடைபெற்றன. பின்னர், மக்கள் ஒருவருக்கொருவர் கிறிஸ்துமஸ் வாழ்த்து தெரிவித்துக் கொண்டனர். இதேபோல, மாநகரில் உள்ள பல்வேறு கிறிஸ்துவ ஆலயங்களிலும் இரவு கிறிஸ்துமஸ் சிறப்பு வழிபாடு நடைபெற்றது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

மேட்டூா் அணைக்கு நீா்வரத்து அதிகரிப்பு!

வருவாய்த் துறை காலிப் பணியிடங்களை நிரப்ப தமிழக அரசு உத்தரவு!

பெண் வழக்குரைஞரின் அந்தரங்க விடியோ மீண்டும் இணையதளங்களில் எவ்வாறு பரவுகிறது?: உயா்நீதிமன்றம் கேள்வி

சங்கா் ஜிவால் இன்று ஓய்வு! புதிய டிஜிபி யார்?

சென்னை விமான நிலையத்தில் கண்ணாடி கதவு உடைந்து நொறுங்கி விபத்து

SCROLL FOR NEXT