குமரி கடல்பகுதியை நெருங்கும் காற்றழுத்த தாழ்வு மண்டலம்: 20 மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு!
குமரி கடல்பகுதியை காற்றழுத்த தாழ்வு மண்டலம் நெருங்கி வருவதால் தமிழ்நாட்டில் 20 மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரத்திற்கு மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
குமரி கடல்பகுதியை காற்றழுத்த தாழ்வு மண்டலம் நெருங்கி வருவதால் தமிழ்நாட்டில் 20 மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரத்திற்கு மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
தென்மேற்கு வங்கக்கடலில் நிலவும் காற்றழுத்த தாழ்வு மண்டலம் மணிக்கு 18 கி.மீட்டர் வேகத்தில் குமரி கடல் பகுதியை நோக்கி நகர்ந்து வருகிறது.
இந்நிலையில், தமிழ்நாட்டில் 20 மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரத்திற்கு மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
அதாவது, சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம், விழுப்புரம், திருவண்ணாமலை, திருப்பத்தூர், தர்மபுரி, சேலம், நாமக்கல், கடலூர், கள்ளக்குறிச்சி, அரியலூர், பெரம்பலூர், திருச்சி, தஞ்சை, புதுக்கோட்டை, சிவகங்கை, ராமநாதபுரம், தூத்துக்குடி ஆகிய மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக தெரிவித்துள்ளது.