தமிழ்நாடு

கூட்டுறவுத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் சென்ற கார் விபத்தில் சிக்கியது!

சென்னை பட்டினம்பாக்கத்தில் கூட்டுறவுத் துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் சென்ற கார் மீது எதிரே வந்த சுற்றுலா வாகனம் மோதி விபத்துக்குள்ளானது.

DIN


சென்னை: சென்னை பட்டினம்பாக்கத்தில் கூட்டுறவுத் துறை முதன்மை செயலாளர் ராதாகிருஷ்ணன் சென்ற கார் மீது எதிரே வந்த சுற்றுலா வாகனம் மோதி விபத்துக்குள்ளானது. ராதாகிருஷ்ணன் காயங்கள் எதுவுமின்றி அதிர்ஷ்டவசமாக தப்பினார் என தகவல்கள் வெளியாகி உள்ளது. 

சுனாமி நினைவு நாளையொட்டி, கூட்டுறவுத் துறை முதன்மை செயலாளர் ராதாகிருஷ்ணன் திங்கள்கிழமை காலை சென்னை பட்டினம்பாக்கம் T.N.04 EG 1000 எண் கொண்ட இன்னோவா காரில் சென்று கொண்டிருந்தார். கார் சென்னை கடற்கரை பகுதியான நொச்சிக்குப்பம் லூப் சாலையில் மீன் மார்க்கெட் வளைவு பகுதியில் சென்று கொண்டிருந்த போது, தவறுதலாக எதிரே வந்த T.N.20 AP.5743 எண் கொண்ட சுற்றுலா வாகனம் திடீரென ராதாகிருஷ்ணன் சென்ற கார் மீது மோதி விபத்துக்குள்ளானது.

இதில், காரின் முன்பகுதி சேதமானது. இந்த விபத்தில் ராதாகிருஷ்ணன் உள்ளிட்ட அனைவரும் காயங்கள் எதுவுமின்றி அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர். இதனால் அந்த பகுதியில்  போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. 

தகவல் அறிந்து வந்த போக்குவரத்து போலீசார் போக்குவரத்து நெரிசலை சரி செய்தவுடன் ராதாகிருஷ்ணன் கடற்கரை பகுதிக்கு சென்று சுனாமி அஞ்சலி செலுத்தினார். விபத்து குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்

விபத்து நடந்த பகுதியின் அருகே போக்குவரத்து காவல்நிலையம் இருந்தும் போக்குவரத்து காவலர்கள் இல்லை என்ற புகார் எழுந்துள்ளது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

அராஜக ஆட்சி நடத்தும் திமுக ஏப்ரலில் வீட்டுக்குச் செல்வர்: எல். முருகன்

டி20 உலகக் கோப்பை : 15 பேர் கொண்ட இந்திய அணி!

இந்திய கலாசாரம் அவமதிக்கப்பட்டதை இளைஞர்கள் படிக்க வேண்டும்: பியூஷ் கோயல்

மே.வங்கத்தில் தரையிறக்க முடியாமல் திரும்பி வந்த பிரதமர் மோடியின் ஹெலிகாப்டர்!

கம்மின்ஸ் - லயன் அசத்தல்: இங்கிலாந்து வெற்றிபெற 228 ரன்கள் தேவை!

SCROLL FOR NEXT