முகப்பு
தமிழ்நாடு

திருவையாறு அருகே தனியார் - அரசுப் பேருந்து நேருக்கு நேர் மோதி விபத்து: 20க்கும் மேற்பட்டோர் காயம்!

தஞ்சாவூர் மாவட்டம் திருவையாறு அருகே தனியார் பேருந்தும் அரசுப் பேருந்தும் நேருக்கு நேர் மோதிக் கொண்டத்தில் அரசு பேருந்தில் இருந்த 20க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். 

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 11:12 AM
திருவையாறு அருகே நேருக்கு நேர் மோதிக்கொண்ட தனியார் -அரசுப் பேருந்து
பகிர்:


தஞ்சாவூர்: தஞ்சாவூர் மாவட்டம் திருவையாறு அருகே தனியார் பேருந்தும் அரசுப் பேருந்தும் நேருக்கு நேர் மோதிக் கொண்டத்தில் பேருந்தில் இருந்த 20க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். 

தஞ்சாவூர் மாவட்டம், திருவையாறு அருகே அரியலூர் - தஞ்சாவூர் தேசிய நெடுஞ்சாலையில் வெள்ளச்சி மண்டபம் என்ற இடத்தில் அரியலூரில் இருந்து தஞ்சாவூர் நோக்கிச் சென்ற சீனிவாசா என்ற தனியார் பேருந்தும், தஞ்சாவூரில் இருந்து தூத்தூர் நோக்கிச் சென்ற அரசுப் பேருந்தும் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானது. 

இதில், அரசு பேருந்தில் சென்ற 20க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்தனர். விபத்தில் படுகாயம் அடைந்தவர்களை மீட்டு திருவையாறு அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். 

சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் பேருந்தை அகற்றும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். 

மேலும், இந்த விபத்து தொடர்பாக வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். பேருந்து விபத்து தொடர்பாக அப்பகுதியில் சுமார் 30 நிமிடங்கள் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள், எதிர்வினைகள் மற்றும் பகிர்வு

View share bar
Show reactions
View quiz
Show comments