கோப்புப்படம் 
தமிழ்நாடு

புத்தாண்டு கொண்டாட்டம்: காவல்துறை கட்டுப்பாடு

புத்தாண்டு கொண்டாட்டத்துக்கான வழிகாட்டு நெறிமுறைகளை தமிழக காவல்துறை வெளியிட்டுள்ளது.

DIN

புத்தாண்டு கொண்டாட்டத்துக்கான வழிகாட்டு நெறிமுறைகளை தமிழக காவல்துறை வெளியிட்டுள்ளது.

தமிழக காவல்துறை வெளியிட்ட வழிகாட்டுதலில் தெரிவித்திருப்பதாவது:

நள்ளிரவு 1 மணிக்கு மேல் புத்தாண்டு கொண்டாட்டத்துக்கு அனுமதி இல்லை எனவும், டிச.31 இரவு புத்தாண்டின்போதும் கடற்கரைகளில் கூடும் பொதுமக்கள் கடலில் இறங்கி கொண்டாட அனுமதி இல்லை எனவும் தெரிவித்துள்ளது.

மது அருந்திவிட்டு வாகனம் ஓட்டினால் வாகனம் பறிமுதல் செய்யப்படும் எனவும், கைது செய்யப்படுவார்கள் எனவும்  தமிழக காவல்துறை தெரிவித்துள்ளது.

வழிபாட்டு தலங்களுக்கு உரிய பாதுகாப்பு காவல்துறையால் வழங்கப்படும் எனவும், வழிபாட்டு தலங்களில் குழப்பம் விளைவிக்க முனைவோர் கைது செய்யப்படுவார்கள் எனவும்  தமிழக காவல்துறை தெரிவித்துள்ளது.

புத்தாண்டையொட்டி டிச.31-ல் மாலை முதல் 90,000 காவல்துறையினர், 10,000 ஊர்க்காவல் படையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட உள்ளதாகவும், கேளிக்கை விடுதிகளில் புத்தாண்டு கொண்டாடுவோர் காவல்துறையின் நிபந்தனைகளை கடைப்பிடிக்க வேண்டும் எனவும், பைக் ரேஸ் போன்ற ஆபத்தான செயல்களில் ஈடுபட்டால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் தமிழக காவல்துறை தெரிவித்துள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பாருங்கள்...

சிறுமியை திருமணம் செய்தவா் மீது போக்சோ வழக்கு

2-ஆவது இன்னிங்ஸில் 400 ரன்களை நூலிழையில் தவறவிட்ட இந்தியா: அபார முன்னிலை!

‘லிப்ட்’ கேட்பது போல நடித்து இளைஞரிடம் பைக் திருட்டு

ஓணக் களிப்பில்... மோக்‌ஷா!

SCROLL FOR NEXT