தமிழ்நாடு

2023-ம் ஆண்டுக்கான ஆசிரியர் தேர்வு வாரிய அட்டவணை வெளியீடு

DIN

2023 ஆம் ஆண்டுக்கான தேர்வு அட்டவணையை தமிழ்நாடு ஆசிரியர் தேர்வு வாரியம் வெளியிட்டுள்ளது.

2023ம் ஆண்டு நடத்தப்பட உள்ள தேர்வுகளின் உத்தேசப் பட்டியலை  ஆசிரியர் தேர்வு வாரியம் வெளியிட்டுள்ளது. தேர்வுகள் மூலம் 15,149 காலிப்பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன.

2023-ல் உதவி பேராசிரியர், பட்டதாரி ஆசிரியர், ஆசிரியர் தகுதி தேர்வு உள்ளிட்ட 9 தேர்வுக்கான அட்டவணையை தமிழ்நாடு ஆசிரியர் தேர்வு வாரியம் வெளியிட்டுள்ளது.

கல்லூரி உதவி பேராசிரியர்களுக்கான 4000 பணியிடங்களுக்கு 2023 ஏப்ரலில் தேர்வு நடைபெறும் என்றும், பட்டதாரி ஆசிரியர்களுக்கான 3587 பணியிடங்களுக்கு ஜூன் மாதம் தேர்வு நடைபெறும் என்றும்,  இடைநிலை ஆசிரியர்களுக்கான 6553 காலிப் பணியிடங்களுக்கு மே மாதம் தேர்வு நடைபெறும் என்றும் ஆசிரியர் தேர்வு வாரியம் தெரிவித்துள்ளது.

ஆசிரியர் தகுதி தேர்வு தாள் 1 மற்றும் 2 தேர்வுகள் 2024 மார்ச் மாதம் நடைபெறும் என்றும், இதற்கான அறிவிப்பு 2023 டிசம்பரில் வெளியாகும் எனவும்  ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவித்துள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

இன்று யோகம் யாருக்கு?

இன்றைய நாள் உங்களுக்கு எப்படி?

மக்களவை 3-ஆம் கட்ட தோ்தல்: வாக்குப் பதிவு தொடங்கியது!

மக்களவைத் தோ்தல்: கா்நாடகத்தில் 14 தொகுதிகளுக்கு இன்று இரண்டாம் வாக்குப் பதிவு: களத்தில் 227 வேட்பாளா்கள்

சமூக வலைதளப் பதிவு: ஜெ.பி.நட்டாவுக்கு எதிராக வழக்கு

SCROLL FOR NEXT