ஸ்ரீரங்கம் அரங்கநாத சுவாமி கோயில் வைகுந்த ஏகாதசி விழாவில் பகல் பத்து ஆறாம் நாளான புதன்கிழமை மூலஸ்தானத்தில் இருந்து  ஸ்ரீ நம்பெருமாள் எழுந்தருளியனார். 
தமிழ்நாடு

ஸ்ரீரங்கம் அரங்கநாதர் கோயிலில் பகல் பத்து 6ம் நாள் உற்சவம்!

ஸ்ரீரங்கம் அரங்கநாத சுவாமி கோயில் வைகுந்த ஏகாதசி விழாவில் பகல் பத்து ஆறாம் நாளான புதன்கிழமை மூலஸ்தானத்தில் இருந்து  ஸ்ரீ நம்பெருமாள் எழுந்தருளியனார்.

DIN


ஸ்ரீரங்கம் அரங்கநாத சுவாமி கோயில் வைகுந்த ஏகாதசி விழாவில் பகல் பத்து ஆறாம் நாளான புதன்கிழமை மூலஸ்தானத்தில் இருந்து  ஸ்ரீ நம்பெருமாள் எழுந்தருளியனார்.

ஸ்ரீரங்கம் அரங்கநாத சுவாமி திருக்கோயில் மார்கழி மாதம் நடைபெறும் வைகுந்த ஏகாதசி பகல்பத்து விழா கடந்த வியாழக்கிழமை இரவு தொடங்கியது. நடைபெற்று வருகிறது. 

இந்நிலையில், ஸ்ரீரங்கம் அரங்கநாத சுவாமி திருக்கோயில் வைகுந்த ஏகாகதசி பகல் பத்து ஆறாம் நாளான புதன்கிழமை அர்ச்சுன மண்டபத்தில் சிகப்பு சிக்குத் தாடையில் வரதன் கலிங்கத்துராய், சூரிய சந்திர வில்லைகள், ஓட்டியாண காப்பு சாற்றி, பங்குனி உத்திர பதக்கம், வைஜயந்தி பதக்கம், அடுக்கு பதக்கங்கள், அரைச் சலங்கை, மகர கர்ண பத்ரம், வைர அபயஹஸ்தத்துடன், வெண்பட்டு வஸ்திரம், 2 வட பெரிய முத்து சரம் சாற்றி, நெல்லிக்காய் பொட்டு மாலை, தங்கப்பூண் பவள மாலை, பின் சேவையாக - மகரி பதக்கம், புஜ கீர்த்தி, தாயத்து தொங்கல் கைகளில் சாற்றி, உள்ளிட்ட திரு ஆபரணங்கள் அலங்காரத்தில் பக்தர்களுக்கு காட்சியளித்தார் ஸ்ரீ நம்பெருமாள்.

பகல்பத்தின் கடைசி நாளான ஜனவரி 1 ஆம் தேதி நம்பெருமாள் மோகினி அலங்காரத்தில் காட்சி தருகிறாா். அதனைத் தொடா்ந்து இராப்பத்து விழாவின் முதல் நாளான 2 ஆம் தேதி முக்கிய நிகழ்வான பரமபதவாசல் திறப்பு நடைபெறவுள்ளது.

சொர்க்கவாசல் திறப்பை முன்னிட்டு வருகிற 2-ஆம் தேதி திருச்சி மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை அறிவித்து ஆட்சியர் மா.பிரதீப் குமார் உத்தரவிட்டுள்ளார். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

காந்தப் பார்வை... ஸ்ருஷ்டி பன்னாட்டி!

டிஎஸ்பி சிராஜ்..! வெளிநாட்டில் 100 விக்கெட்டுகள்!

3 தேசிய விருதுகள்! பார்க்கிங் படக்குழுவை வாழ்த்திய கமல் ஹாசன்!

நிறைவடையும் தங்க மகள்... மகளே என் மருமகளே தொடரின் ஒளிபரப்பு அறிவிப்பு!

புரியில் 15 வயது சிறுமி மரண வழக்கில் திடீர் திருப்பம்! போலீஸ் விளக்கம்!

SCROLL FOR NEXT