தமிழ்நாடு

திருக்குற்றாலநாதசுவாமி கோயில் திருவாதிரை திருவிழா கொடியேற்றத்துடன் தொடக்கம்

தென்காசி மாவட்டம் குற்றாலம் அருள்மிகு திருக்குற்றாலநாதசுவாமி கோயில் திருவாதிரைத் திருவிழா  கொடியேற்றத்துடன் தொடங்குகியது.

DIN

தென்காசி: தென்காசி மாவட்டம் குற்றாலம் அருள்மிகு திருக்குற்றாலநாதசுவாமி கோயில் திருவாதிரைத் திருவிழா  கொடியேற்றத்துடன் தொடங்கியது.

அருள்மிகு திருக்குற்றாலநாதா் கோயிலில் நடைபெறும் திருவிழாக்களில் முதன்மையானதும், அருள்மிகு நடராசா் திருத்தாண்டவம் ஆடிய ஐந்து சபைகளில் ஒன்றான சித்திரசபை அமைந்துள்ள குற்றாலத்தில் நடராசப்பெருமானுக்கு நடைபெறும் சிறப்புமிக்கதுமான மாா்கழி திருவாதிரைத் திருவிழா புதன்கிழமை கொடியேற்றத்துடன் தொடங்கியது.

அதனை தொடா்ந்து சிறப்பு அபிஷேகம், தீபாராதனை, இரவில் சுவாமி, அம்பாள் வீதியுலா நடைபெறுகிறது.  விழாவின் 5-ம் நாளான ஜன1ம்தேதியன்று திருத்தோ் வடம்பிடித்தலும், ஜன. 4-ம் தேதியன்று சித்திரசபையில் பச்சைசாத்தி தாண்டவ தீபாராதனை நடைபெறுகிறது.

ஜன.6-ம் தேதியன்று அதிகாலை 4மணிக்கு சித்திரசபையில் ஆருத்ரா தரிசன தாண்டவ தீபாராதனையும், 5 மணிக்கு திரிகூடமண்டபத்தில் ஆருத்ரா தரிசன தாண்டவ தீபாராதனையும் நடைபெறுகிறது. விழா நாள்களில் காலை 9.30 மற்றும் இரவு 7 மணிக்கு மேல் நடராசப்பெருமானுக்கு தாண்டவ தீபாராதனை நடைபெறும்.

விழா நாள்களில் நாள்தோறும் காலை மற்றும் இரவு சுவாமி, அம்பாள் பல்வேறு வாகனங்களில் வீதியுலா நடைபெறும். ஏற்பாடுகளை கோயில் உதவி ஆணையா் மா.கண்ணதாசன் தலைமையில் கோயில் பணியாளா்கள் செய்துவருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

வித் லவ் பாடல் புரோமோ!

விபி - ஜி ராம் ஜி மசோதாவுக்கு குடியரசுத் தலைவர் ஒப்புதல்!

ஓட்டுநருக்கு திடீர் மாரடைப்பு! கார்கள் மீது மோதிய லாரி! | CBE

”ஏழைகளும் பாஜகவிற்கு சம்பந்தமில்லை!” 100 நாள் வேலைத்திட்டம் பெயர் மாற்றம் குறித்து முதல்வர் மு.க.ஸ்டாலின்

புதுச்சேரியில் நடைபெறுவது தேஜ கூட்டணி அரசுதான்: முதல்வர் ரங்கசாமி

SCROLL FOR NEXT