தமிழ்நாடு

பிரதமர் மோடியின் தாயார் மறைவு: ஆளுநர் ஆர்.என். ரவி இரங்கல்

பிரதமர் நரேந்திர மோடியின் தாயார் ஹீராபென் மறைவுக்கு தமிழக ஆளுநர் ஆர்.என். ரவி இரங்கல் தெரிவித்துள்ளார்.  

DIN


பிரதமர் நரேந்திர மோடியின் தாயார் ஹீராபென் மறைவுக்கு தமிழக ஆளுநர் ஆர்.என். ரவி இரங்கல் தெரிவித்துள்ளார்.  

குஜராத் மாநிலம், அகமதாபாதில் உள்ள யு.என். மேத்தா இதய நோய் சிகிச்சை மற்றும் ஆராய்ச்சி மையத்தில் அவா் புதன்கிழமை அனுமதிக்கப்பட்டாா். பிரதமா் மோடி அவரை நேரில் சந்தித்து நலம் விசாரித்தாா். சுமாா் ஒரு மணி நேரம் மருத்துவமனையில் இருந்து அவா் மருத்துவா்களிடம் தாயாரின் உடல்நிலை குறித்து கேட்டறிந்தாா்.

இந்நிலையில், பிரதமர் நரேந்திர மோடியின் தாயார் ஹீராபென் மோடி வெள்ளிக்கிழமை அதிகாலை உடல்நலக் குறைவால் மருத்துவமனையில் காலமானார். 

ஹீராபென் மறைவுக்கு தமிழக ஆளுநர் ஆர்.என். ரவி இரங்கல் தெரிவித்துள்ளார்.

அவர் ட்விட்டரில் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில், பிரதமர் நரேந்திர மோடியின் தாயார் மறைவு மிகவும் வருந்ததக்க நிகழ்வு. அவரது ஆத்மா சாந்தியடைய பிரார்த்திக்கிறேன் என்று குறிப்பிட்டுள்ளார். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பந்துவீச்சிலும் ஷஃபாலி அசத்தல்: 4 முக்கிய விக்கெட்டுகளை இழந்த தென்னாப்பிரிக்கா!

ஸ்குவிட் கேம்.. ‘நான் ரெடி’ -ரெபா!

சென்னை ஓபன் மகளிா் டென்னிஸ்: இந்தோனேசிய வீராங்கனை சாம்பியன்!

ராயல் என்ஃபீல்ட் விற்பனை 13% உயர்வு!

3 ரோஸஸ்... ஆஞ்சல் முஞ்சால்!

SCROLL FOR NEXT