முகப்பு
தமிழ்நாடு

ரூ.41 ஆயிரத்தை தாண்டியது ஒரு சவரன் தங்கம்!

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.120 உயர்ந்து ஒரு சவரன் ரூ.41,040 ஆக விற்பனை செய்யப்படுகிறது. 

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 11:14 AM
பகிர்:


சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.120 உயர்ந்து ஒரு சவரன் ரூ.41,040 ஆக விற்பனை செய்யப்படுகிறது. 

தங்கம் விலை அவ்வப்போது ஏற்ற இறக்கம் கண்டு வருவது தொடர்ந்து நிகழ்ந்து வரும் ஒன்றாக இருந்தாலும், கடந்த சில வாரங்களாக  தங்கத்தின் விலை ஏற்றம் கண்டு வருகிறது. கடந்த வாரத்தில் அதிகபட்சமாக டிச.12 ஆம் தேதி ஒரு சவரன் தங்கம் ரூ.40,360-க்கும், டிச.14 ஆம் தேதி ஒரு சவரன் ரூ.40,800 ஆக விற்பனை செய்யப்பட்டது. பின்னர், 16 ஆம் தேதி ஒரு சவரன் ரூ.40,360 ஆக குறைந்து விற்பனை செய்யப்பட்டது. பிறகு கடந்த ஒரு வாரத்திற்கு மேலாக தங்கத்தின் விலை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. 

இந்நிலையில், இந்த ஆண்டின் கடைசி நாளான சனிக்கிழமை (டிச. 31) சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.15 உயர்ந்து ஒரு கிராம் தங்கம் ரூ.5,130 ஆக விற்பனை செய்யப்படுகிறது. இதன்மூலம் சவரனுக்கு ரூ.120 உயர்ந்து ஒரு சவரன் ரூ.41,040 ஆக விற்பனை செய்யப்படுகிறது.

அதேசமயம், வெள்ளியின் விலை கிராமுக்கு ரூ.20 காசுகள் குறைந்து ரூ.74.30 ஆகவும், ஒரு கிலோவுக்கு ரூ.200 குறைந்து ரூ.74,300 ஆக விற்பனை செய்யப்படுகிறது. 

தங்கத்தின் விலை மீண்டும் சவரனுக்கு ரூ.41 ஆயிரமாக அதிகரித்துள்ளது தங்கம் வாங்குவோர் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

முழு கட்டுரையைப் படிக்க →