கோப்புப்படம் 
தமிழ்நாடு

திமுக 4-ம் கட்ட வேட்பாளர்கள் பட்டியல் வெளியீடு

தமிழகத்தில் நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலையொட்டி, திமுக சார்பில் 4-ஆம் கட்ட வேட்பாளர்கள் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. 

DIN

தமிழகத்தில் நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலையொட்டி, திமுக சார்பில் 4-ஆம் கட்ட வேட்பாளர்கள் பட்டியலை கட்சியின் பொதுச் செயலாளர் துரைமுருகன் இன்று வெளியிட்டார். 

தமிழகத்தில் 21 மாநகராட்சிகள், 138 நகராட்சிகள், 490 பேரூராட்சிகள் என 649 நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கு தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி ஒரேகட்டமாக தேர்தல், பிப்ரவரி 19 ஆம் தேதி நடைபெற உள்ளது. பிப்ரவரி 22 ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெற உள்ளது. 

ஜனவரி 28 ஆம் தேதி தொடங்கும் வேட்புமனுத் தாக்கல் பிப்ரவரி 4 ஆம் தேதி நிறைவடைகிறது. வேட்புமனு பரிசீலனை பிப்ரவரி 5 ஆம் தேதி நடைபெறும். வேட்புமனுக்களை திரும்பப் பெற பிப்ரவரி 7 ஆம் தேதி வரை கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளது.

இதையடுத்து கட்சிகள் தங்களது வேட்பாளர்கள் பட்டியலை வெளியிட்டு வருகின்றன. அந்தவகையில், திமுக, நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலுக்கான 4-ஆம் கட்ட வேட்பாளர்கள் பட்டியலை வெளியிட்டுள்ளது. திருப்பத்தூர், ஆம்பூர், ஜோலார்பேட்டை, குளித்தலை, ராசிபுரம், வாணியம்பாடி, நாமக்கல் உள்ளிட்ட இடங்களில் போட்டியிட உள்ள வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டுள்ளனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

நிறுத்துங்க... ஐஸ்வர்யா மேனன்!

தாம்பரம் புதிய அரசு மருத்துவமனை: ஆக. 9-ல் முதல்வர் திறந்து வைக்கிறார்!

ஆதாரங்கள் இல்லை! சத்யேந்தர் ஜெயினுக்கு எதிரான ஊழல் வழக்கு முடித்துவைப்பு!

அமெரிக்காவுக்குச் செல்ல இனி ரூ. 13 லட்சம் டெபாசிட்? விரைவில் அறிவிப்பு வருகிறது!!

மத்திய அரசுக்கு எதிராக கேள்வி எழுப்புவதுதான் ராகுலின் வேலை: பிரியங்கா காந்தி

SCROLL FOR NEXT