தமிழ்நாடு

நாங்கூர் நாராயண பெருமாள் கோயிலில் இன்றிரவு கருடசேவை

திருவெண்காடு அருகே நாங்கூர் நாராயண பெருமாள் கோவிலில் இன்றிரவு 11 பெருமாள் கருட சேவை உற்சவம் நடக்கிறது. 

DIN


திருவெண்காடு அருகே நாங்கூர் நாராயண பெருமாள் கோவிலில் இன்றிரவு 11 பெருமாள் கருட சேவை உற்சவம் நடக்கிறது. 

அப்போது 11 பெருமாள்கள் பற்றி திருமங்கை ஆழ்வார் பாடிய பாடல்கள் பாடப்பட்டு தீபாராதனை காட்டப்படும். இந்த நிகழ்விற்காக புதன்கிழமை மதியம் நாங்கூர் நாராயண பெருமாள் கோவிலுக்கு திருமங்கையாழ்வார் குமுதவல்லி நாச்சியாருடன் பல்லக்கில் கொண்டு வரப்பட்டார். 

இதனைத் தொடர்ந்து திருமங்கை ஆழ்வாருக்கு திருப்பாவை சாற்றுமுறை நிகழ்ச்சி நடந்தது. பின்னர் தீபாராதனை காட்டப்பட்டது. இதில் கோவில் நிர்வாக அதிகாரி குணசேகரன், கிராம பொது நலச் சங்கத் தலைவர் அன்பு, பக்த ஜன சபை தலைவர் ரகுநாதன் உள்ளிட்ட திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

”RSS சித்தாந்தத்தை மனதில் வைத்துக்கொண்டு வெளியே SIR-ஐ எதிர்த்து போராடும் Vijay" - Appavu

பாஜக - தவெக கூட்டணி குறித்து நயினார் நாகேந்திரன் | TVK-BJP alliance

2025-ல் இதுவரை 5.25 லட்சம் பேர் நாய்க்கடியால் பாதிப்பு: 28 பேர் பலி

திரைத்துறையில் 20 ஆண்டுகள்... ரெஜினா கேசண்ட்ராவுக்கு குவியும் வாழ்த்துகள்!

அறிமுகமான நாளில் எம்வீ ஃபோட்டோ வாலாட்டிக் பங்குகள் 1% உயர்வு!

SCROLL FOR NEXT