தமிழ்நாடு

சுருளி அருவிக்கு அனுமதி: நீர்வரத்து இல்லாததால் பயணிகள் ஏமாற்றம்

DIN


கம்பம்: தேனி மாவட்டத்தில் உள்ள புகழ்பெற்ற சுற்றுலாத் தலமான சுருளி அருவி இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு புதன்கிழமை  திறக்கப்பட்டது.   அருவியில் நீர்வரத்து இல்லாததால் பொதுமக்கள் மற்றும் சுற்றுலா பயணிகள் ஏமாற்றம் அடைந்தனர்.

கரோனா தொற்று பரவல் காரணமாக தமிழகத்தில் உள்ள அனைத்து சுற்றுலா தளங்களும் அடைக்கப்பட்டன, இதில் தேனி மாவட்டத்தில் புகழ் பெற்ற  சுற்றுலாத்தலமான சுருளி அருவியும் ஒன்று.

இந்நிலையில் 2 ஆண்டுகளுக்கு பிறகு சுற்றுலாத்தலமான சுருளி அருவி புதன்கிழமை திறக்கப்பட்டது.

சுருளி அருவி, ஸ்ரீவில்லிபுத்தூர் மேகமலை புலிகள் காப்பகத்தில் உள்ளதால், கம்பம் கிழக்கு வனச்சரகத்தினர் அருவிக்கு வருகின்ற சுற்றுலா பயணிகளை வெப்ப அனலைசர் கருவி மூலம் உடற்பரிசோதனை செய்தும், சனிடைசர் கொடுத்தும் சுருளி அருவி பகுதிக்கு அனுப்பிவத்தனர்.

நுழைவு கட்டணமாக ரூபாய் 30 வசூலிக்கப்பட்டது,  5 வயதுக்கு குறைந்தவர்களுக்கு கட்டணம் இல்லை, வாகனங்கள் அனுமதிக்கப்படவில்லை.

தற்போது கோடைகால தொடக்கம் ஆவதால், சுருளி அருவி என் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் மழை பெய்யாததால் சுருளி அருவிக்கு நீர்வரத்து இல்லை.

இதனால் சுருளி அருவிக்கு குளிக்க சென்ற சுற்றுலா பயணிகள் அருவியில் நீர்வரத்து இல்லாததால் ஏமாற்றம் அடைந்து திரும்பினர்.

இதுபற்றிய கிழக்கு வனச்சரக அலுவலர் ஒருவரிடம் கேட்டபோது, சுருளி அருவியில் நீர் பிடிப்பு பகுதியில் மழை இல்லாததால் நீர்வரத்து இல்லை.

ஆனால், அதே நேரத்தில் சுருளி அருவியில், பகுதிகளுக்குள் பொதுமக்கள், சுற்றுலாப் பயணிகள் அனுமதிக்கப்பட்டு வருகின்றனர். கரோனா பரவல் முன்னெச்சரிக்கை தடுப்பு நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டு வருகிறது என்று தெரிவித்தார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ரேபரேலி தொகுதி: ஃபெரோஸ் காந்தி முதல் ராகுல் காந்தி வரை...

ஹிந்துக்களை இரண்டாம் தர குடிமக்களாக மாற்றிய திரிணமூல்: பிரதமா் மோடி குற்றச்சாட்டு

அமேதியில் தோ்தலுக்கு முன்பே தோல்வியை ஒப்புக் கொண்டது காங்கிரஸ்: ஸ்மிருதி இரானி கருத்து

தினம் தினம் திருநாள்: தினப்பலன்கள்!

விவசாயிகளுக்கு வேளாண்மைக் கல்லூரி மாணவிகள் செய்முறை விளக்கம்

SCROLL FOR NEXT